Just In
- 4 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 5 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 6 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 6 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
இந்தியாவில் 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சினிமாவுக்கு எண்ட் கார்டு போட போகிறாரா ரவுடி பேபி? திருச்சியில் தேர்வு எழுதியதன் பரபர பின்னணி!
சென்னை: நடிகை சாய் பல்லவி திருச்சியில் தேர்வு எழுதியது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தனித்துவமான நடிப்பு, அசத்தலான நடனம் என தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
கோலிவுட்டில் உங்கள மாதிரி அழகியில்ல.. யாஷிகாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!

பல சாதனைகள்
தமிழில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்தார் நடிகை சாய் பல்லவி. இதில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலில் இவர் ஆடிய நடனம் பட்டிதொட்டியெங்கும் பிரபலம். அந்தப் பாடல் பல்வேறு சாதனைகளையும் புரிந்துள்ளது.

திருச்சியில் தேர்வு
அந்த பாடலுக்கு பிறகு ரவுடி பேபி என்றே அழைக்கப்பட்டு வருகிறார் சாய் பல்லவி. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி நேற்று முன்தினம் திருச்சியில் மருத்துவ படிப்புக்கான தேர்வை எழுதினார். அப்போது சக தேர்வர்கள் அவருடன் செல்பி எடுத்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

மருத்துவ தேர்வு
அதாவது வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இங்கு மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வு எனும் எஃப்எம்ஜிஇ எனும் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்வு எழுத வேண்டும்
குறிப்பாக ரஷ்யா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் பணியாற்ற இந்த தேர்வை எழுதியாக வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் இங்கு மருத்துவர்களாக பயிற்சி மேற்கொள்ள முடியும், பணியாற்றவும் முடியும்.

ஜார்ஜியாவில்..
அதற்காகதான் நடிகை சாய் பல்லவி நேற்று முன்தினம் திருச்சி சிறுகனூர் எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளார். நடிகை சாய் பல்லவி 2016ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார்.

சினிமாவுக்கு என்ட் கார்டு?
ஆனால் தற்போது அதற்கான தேர்வை எழுதியுள்ளார். சாய் பல்லவி தேர்வு எழுதிய தகவல் ஊடகங்களில் செய்தியாக பரவ, அவர் சினிமாவுக்கு என்ட் கார்டு போட்டு விட்டு மருத்துவ சேவையில் ஈடுபட போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்விதான் நிலையானது
என்னதான் சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் போதும் கல்விதான் நிலையானது, படித்த படிப்புதான் என்றும் பயன்தரும் என கையோடு எஃப்எம்ஜிஇ தேர்வை எழுதி சினிமா இல்லாவிட்டாலும் மருத்துவ தொழிலை மேற்கொள்ள ஏதுவாக தயார் படுத்திக் கொண்டுள்ளார் சாய் பல்லவி.

சூடுபிடிக்கும் விவாதம்
மருத்துவ தொழிலை பொருத்தவரை தொடர்ந்து பிராக்டிஸிங்கில் இருக்க வேண்டும். ஆகையால் சாய் பல்லவி சினிமாவை மட்டும் பார்க்க போகிறாரா அல்லது மருத்துவ தொழிலா அல்லது இரண்டையுமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.