ஸ்ரீநிதி சொல்வது உண்மையா, வருங்கால கணவரால் பிரச்சனையா...நக்ஷத்ரா வெளியிட்ட வீடியோ
சென்னை : வருங்கால கணவரால் மிகவும் ஆபத்தான நிலையில் சீரியல் நடிகை நக்ஷத்ரா இருப்பதாக, மற்றொரு சீரியல் நடிகையான ஸ்ரீநிதி பரபரப்பு வீடியோ வெளியிட்டிருந்தார். அவர் சொன்னது உண்மையா, இல்லையா என்பது பற்றிய விளக்கம் அளித்து நக்ஷத்ராவே தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.
யாரடி நீ மோனி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ஸ்ரீநிதி சமீப காலமாக அடுத்தடுத்து பரபரப்பை கிளப்பி வருகிறார். அப்படி சமீபத்தில் லைவ் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். அதில் அவர் சொல்லியிருந்த பல தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
அந்த வீடியோவில் ஸ்ரீநிதி கூறுகையில், சீரியல் நடிகை நக்ஷத்ரா என்னுடைய நெருங்கிய தோழி. அவரை மூளை சலவை செய்து அவரது வருங்கால கணவர், மனஅழுத்தம் கொடுத்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 10 நாட்களில் முதல் மனைவியை பிரிந்து விட்டு, தற்போது நக்ஷத்ராவை திருமணம் செய்து கொள்ள பார்க்கிறார். தயவு செய்து அவரைக் காப்பாற்றி, அவரது அம்மாவிடம் சேர்த்து வைக்க உதவுங்கள்.

சித்ரா நிலை தான் நக்ஷத்ராவிற்கும்
அப்படி செய்யா விட்டால் நாளை விஜே சித்ராவின் நிலை தான் நக்ஷத்ராவிற்கும் வரும். சித்ராவை போல், நக்ஷத்ராவையும் இழந்து விட்டு, பிறகு வேதனைப்படக் கூடாது. நாளை நக்ஷத்ரா இறந்தால் கூட நான் செல்ல மாட்டேன். நக்ஷத்ராவின் பிரச்சனையால் நான் பல அவமானங்களை சந்தித்து விட்டேன். இதனால் கடந்த சில மாதங்களாக மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் என பேசியிருந்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தாலும், விஜே சித்ராவை தெரியும் என சொல்பவர் அவர் இறந்து 2 வருடங்களாக வாய் திறக்காமல் இருந்தது ஏன். அனைவரும் தெரிந்த விஷயங்களை புதிதாக சொல்வதை போல் இவர் சொல்லிக் கொண்டிருக்கிறாரே என கேள்வி எழுப்பினர்.

வீடியோ வெளியிட்ட நக்ஷத்ரா
ஆனால் ஸ்ரீநிதி சொல்வது உண்மையா, நிஜமாகவே வருங்கால கணவரால் பிரச்சனையை சந்தித்து வருகிறாரா, நக்ஷத்ரா உண்மையிலேயே மனஅழுத்தத்தில் இருக்கிறாரா என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். நக்ஷத்ரா தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சமயத்தில் ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு, நக்ஷத்ராவிடம் பலரும் கேட்டு வந்ததால், அவரே விளக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்னை யாரும் பிடித்து வைக்கவில்லை
அதில், என் மீது அக்கறையுடன் அனைவரும் விசாரித்ததற்கு நன்றி. ஸ்ரீநிதி சொல்வதை போல் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் பாதுகாப்பாக, நன்றாக இருக்கிறேன். என்னை யாரோ மிரட்டி வைத்திருக்கிறார்கள், பிடித்து வைத்திருக்கிறார்கள். நான் காதலிப்பவரின் குடும்பத்தினர் என்னை பிடித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சுதந்திரமாக ஷுட்டிங் சென்று வருகிறேன். முதலில் அவர் ஏதோ சொல்கிறார். ஆனால் மக்களுக்கு என்னை பற்றி தெரியும் என நினைத்து சாதாரணமாக விட்டு விட்டேன். அதனால் தான் உடனடியாக நான் வீடியோ போடவில்லை.
Recommended Video

யாரும் பெரிதுபடுத்த வேண்டாம்
ஆனால் பலரும் தொடர்ந்து விசாரிப்பதால், அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளியிடுகிறேன். அவருக்கு எதை தனிப்பட்ட முறையில் பேச வேண்டும், எதை பொது வெளியில் பேச வேண்டும் என தெரியவில்லை. அதனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











