»   »  அவரு (ரஜினி) இமயமலை.. நாங்க பரங்கிமலை!- இயக்குநர் திரைவண்ணன்

அவரு (ரஜினி) இமயமலை.. நாங்க பரங்கிமலை!- இயக்குநர் திரைவண்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் படத்தில் ரஜினியை நாங்கள் கிண்டல் செய்யவில்லை. அவர் இமயமலை என்றால்.. நாங்கள் பரங்கிமலை என்று இயக்குநர் திரைவண்ணன் கூறினார்.

ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் என்ற படத்தை இயக்கியவர் திரைவண்ணன். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படம் இயக்கியுள்ளார். அட்ரா மச்சான் விசிலு என்ற அந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, சீனிவாசன் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகியாக நைனா சர்வார் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் சிவா, சீனிவாசன், இயக்குநர் திரைவண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Is Adra Machan Visilu spoofs Rajinikanth?

அப்போது இந்தப் படம் குறித்து இயக்குநர் பேசுகையில், "கச்சேரி ஆரம்பம் படத்துக்குப்பிறகு ஐந்து வருடம் கழித்து இந்தப்படத்தை இயக்கிருக்கேன்.

இந்தப்படத்துக்கு கதாநாயகி தேடிப்பார்த்து, இங்கே எதுவும் அமையாம, கடைசியா பெங்களூர்ல கிடைச்ச தேவதைதான் இந்த நைனா சர்வார். கதை சொல்லியெல்லாம் அவங்களை ஒப்பந்தம் செய்யல.. வந்தபிறகுதான் கதை கேட்டாங்க. மதுரை பொண்ணு கேரக்டரை சரியா புரிஞ்சு நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு தமிழ் தெரியாது. எனக்கு ஆங்கிலம் தெரியாது.. ஷூட்டிங் ஸ்பாட்ல எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மொழிபெயர்ப்பு பண்றதுல சிவா தான் ஒரு உதவி இயக்குனர் மாதிரி செயல்பட்டார்.

இந்தப் படத்துல ராஜ்கபூர், செல்வபாரதி, ஜெகன், டி.பி.கஜேந்திரன்ன்னு நான் உள்பட மொத்தம் ஆறேழு இயக்குனர்களை நடிக்க வச்சிருக்கேன். குறிப்பா சொல்லணும்னா நான் யார்கிட்ட எல்லாம் வாய்ப்பு கேட்டு போனேனோ, யாருகிட்ட வேலை பார்த்தேனோ அந்த டைரக்டர்களை எல்லாம் இதுல நடிக்க வச்சுருக்கேன்.. இந்தப்படத்தோட கதையை வெறும் 20 நிமிடம் மட்டும் கேட்ட தயாரிப்பாளர் கோபி இதை உடனே தயாரிக்கலாம் என கிரீன் சிக்னல் கொடுத்துட்டார்.

Is Adra Machan Visilu spoofs Rajinikanth?

கச்சேரி ஆரம்பம்னு சொன்னாலே அடுத்து அட்ரா மச்சான் விசிலுன்னு தான் சொல்வாங்க... ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கச்சேரிய ஆரம்பிச்சு வச்ச எனக்கு இப்பத்தான் அட்ரா மச்சான் விசிலுன்னு சொல்ல நேரம் வந்திருக்கு.

இந்தப்படத்துல நானும் மூணு பாட்டு எழுதியிருக்கேன்.. அதுக்கு காரணம் இசையமைப்பாளர் ரகுநந்தன் தான். அதேமாதிரி இந்தப்படத்தோட ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா என்கிட்டே வந்து நடிக்க சான்ஸ் கொடுங்க சார்னு கேட்டார். நான் நடிக்க சான்ஸ் கொடுத்து, ஒளிப்பதிவும் பண்ண வச்சிருக்கேன்," என்றார்.

இந்தப் படம் ரஜினியைக் கிண்டலடிப்பதாக ஒரு பேச்சு இருக்கிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த திரைவண்ணன், "எப்படி ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு போலீஸ் இவங்கள்ல ஒருத்தரை வில்லனா காட்டுறோமோ, அதே போலத்தான் ஒரு நடிகனை வில்லனா காட்டியிருக்கோம்.. அவ்வளவுதான். பவர் ஸ்டார் சீனிவாசன்தான் வில்லத்தனம் பண்ணிருக்கார். இது எந்த நடிகரையும் குறிப்பிட்டு பண்ணலை. ரஜினி சாரை கிண்டல் பண்ற மாதிரி எந்த காட்சியும் இல்ல. நாங்க அவ்வளவு பெரிய ஆளுமில்ல.. அவரு இமயமலை.. நாங்க வெறும் பரங்கிமலை," என்றார்.

மிர்ச்சி சிவா, சீனிவாசன், சென்ராயன், இசையமைப்பாளர் ரகுநந்தன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

English summary
Director Thiraivannan of Adra Machan Visilu explains that he hasn't spoof Rajinikanth in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil