ஆரம்பிச்சிடாங்கப்பா...ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா?...வீடியோவால் தீயாய் பரவும் தகவல்

மும்பை : திருமணமான நடிகைகள் கர்ப்பமாக இருப்பதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவுவது ஒன்றும் புதியதல்ல. அதிலும் பாலிவுட் ஹீரோன்கள் அடிக்கடி இது போன்ற வதந்திகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை கத்ரினா கைஃப் மும்பை ஏர்போர்ட்டில் லூசான சுடிதாரில், சிம்பிளாக நடந்து வந்ததை பார்த்து அவர் கர்ப்பமாக இருக்கிறார் என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கொளுத்தி போட்டனர். ஆனால் நடிகை தரப்பில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை.

இதைத் தொடர்ந்து கரீனா கபூரும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் கத்ரினாவும், கரீனாவும் தற்போது வெளிநாட்டில் தங்கள் கணவர் மற்றும் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய் 2வது முறையாக கர்ப்பமா

ஐஸ்வர்யா ராய் 2வது முறையாக கர்ப்பமா

இவர்களைத் தொடர்ந்து தற்போது 48 வயதாகும் நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கிளப்பி விட்டுள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் தான் மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தில் நந்தினி மற்றும் மந்தாகினி என இரட்டை ரோல்களில் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இந்த படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது.

ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் வீடியோ

ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் வீடியோ

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராதியா மற்றும் கணவர் அபிஷேக் பச்சனுடன் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் முழுவதுமாக கவர் செய்யப்பட்ட கருப்பு நிற கவுன், கருப்பு நிற ஓவர் கோட் அணிந்த படி, மகள் கையை பிடித்தபடி நடந்து வருகிறார். கணவர் அபிஷேக் பின்னால் நடந்து வருகிறார்.

குடும்பத்துடன் நியூயார்க் பயணம்

குடும்பத்துடன் நியூயார்க் பயணம்

குடும்பத்துடன் நியூயார்க் சென்று விட்டு இவர்கள் திரும்பி வந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இதே நியூயார்க் நகரில் தான் அபிஷேக் தனது காதலை, ஐஸ்வர்யாவிடம் வெளிப்படுத்தினார். இதைக் கொண்டாடுவதற்காக இந்த தம்பதி அடிக்கடி நியூயார்க் சென்று வருவதை பல வருடங்களாக வாடிக்கையாக வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இது ஒன்றும் முதல் முறையல்ல

இது ஒன்றும் முதல் முறையல்ல

இந்த வீடியோவை பார்த்து விட்டு பலரும், ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா என கேட்டு வருகின்றனர். இதற்கு முன்பும் இதே போல் பல முறை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அவரது போட்டோவை பகிர்ந்து, தகவல் பரவி உள்ளது. இருந்தாலும் இந்த வீடியோ வைரலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறாரா, இல்லையா என்பது பற்றி அவர் தரப்பில் இருந்தோ அல்லது அவர்களின் குடும்பத்தின் சார்பிலோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அபிஷேக்குடன் திருமணம்

அபிஷேக்குடன் திருமணம்

ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனுடன் இரண்டு ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்த நிலையில், 2007 ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2011 ம் ஆண்டு ஆராத்யா என்ற மகள் பிறந்தாள். குழந்தை பிறப்பதற்காக சில காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்த ஐஸ்வர்யா ராய், அதன் பிறகு தொடர்ந்து தற்போது வரை பிஸியாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X