Don't Miss!
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
லவ்வுக்கு செகண்ட் சான்ஸ்...தனுஷை பிரியும் முடிவை கைவிடுகிறாரா ஐஸ்வர்யா?
சென்னை : லவ்வுக்கு செகண்ட் சான்ஸ் கொடுக்க விரும்புவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி உள்ளார். இதனால் அவர் தனுஷை பிரியும் முடிவை கைவிட்டுள்ளாரா என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.
இயக்குனர், பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முக தன்மை கொண்ட ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தற்போது மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கான ப்ரோமோ காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ விரைவில் வெளியிடப்பட உள்ளது.
கடவுள்
வழிகாட்டுகிறார்...
எதை
சொல்கிறார்
ரஜினி
மகள்
ஐஸ்வர்யா

பிரிவை அறிவித்த ஐஸ்வர்யா, தனுஷ்
2004 ம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17 ம் தேதி தாங்கள் பிரிய போவதாக இருவரும் அறிவித்தனர். இதனையடுத்து இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது பற்றி பல விதங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

மனதை மாற்றினாரா ஐஸ்வர்யா
ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் அவர்களின் பிரிவு முடிவை மாற்றும் படி குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பேசி வந்ததாக கூறப்பட்டது. இதனால் பிரியும் முடிவை இருவருமே கைவிட்டு, தங்களின் மனதை மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் ஐதராபாத்தில் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்த ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார் ஐஸ்வர்யா.

நமக்கானது நம்மிடம் வந்து சேரும்
இந்நிலையில் தனுஷ் உடனான பிரிவை அறிவித்த பிறகு முதல் முறையாக இந்துஸ்தான் டைம்ஸிற்கு பேட்டி அளித்துள்ளார் ஐஸ்வர்யா. அதில், வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் சவால்களை சமாளிக்க முடியும் என நம்புகிறேன். எந்த பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து முன்னேறி செல்ல வேண்டும். அப்படி சென்றால் நமக்கானது இறுதியில் நம்மிடம் வந்த சேரும்.

லவ்வுக்கு செகண்ட் சான்ஸ்
ஐ லவ் மை டாட், ஐ லவ் மை மாம், ஐ லவ் மை Children. அன்பிற்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது என நம்புகிறேன். காதலுக்கு செகண்ட் சாய்ஸ் உண்டு. ஆமாம் நான் காதலிக்கிறேன் என தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அப்படியானால் தனுஷை பிரியும் முடிவை ஐஸ்வர்யா கை விட்டது உண்மை தானா. தனுஷின் காதலுக்கு செகண்ட் சான்ஸ் கொடுத்து அதை ஏற்க தயாராகி விட்டாரா என கேட்டு வருகின்றனர்.விரைவில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.