»   »  ஜெயலலிதாவின் வாரிசு: அஜீத் தரப்பில் என்ன சொல்கிறார்கள்?

ஜெயலலிதாவின் வாரிசு: அஜீத் தரப்பில் என்ன சொல்கிறார்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் அடுத்த முதல்வர், ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறுவதில் உண்மை இல்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது தனது வாரிசு நடிகர் அஜீத் என்றும், தன்னை அடுத்து அதிமுகவை அவர் தான் தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும் கூறியதாக கன்னட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அஜீத் தான் அவரது வாரிசு என்று மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஊடகங்கள் நேற்று புரளியை கிளப்பின. இது குறித்து அஜீத் தரப்பில் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில்,

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் பண்பு, அன்பு, துணிச்சல் ஆகியவை அஜீத்துக்கு மிகவும் பிடிக்கும். தான் மதிக்கும் நபர் இறந்த செய்தி அறிந்த அஜீத் நேரில் அஞ்சலி செலுத்த பல்கேரியாவில் இருந்து வந்தார்.

அஜீத்

அஜீத்

தனக்கு ஜெயலலிதா பற்றி தகவல் கிடைத்தவுடன் கிளம்பியும் அஜீத்தால் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனது. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகே அவர் சென்னையை அடைந்தார்.

அரசியல்

அரசியல்

அஜீத்துக்கு அரசியலுக்கு வரும் நினைப்பே இல்லை. அவர் என்றுமே அரசியலுக்கு வர மாட்டார். வாக்களிக்கும் ஜனநாயக கடமையை மட்டுமே அவர் தவறாமல் நிறைவேற்றுவார்.

யார்?

யார்?

அரசியலில் ஈடுபாடே இல்லாத அஜீத்தை போய் அடுத்த முதல்வர், ஜெயலலிதாவின் வாரிசு என்று எல்லாம் யார் கிளப்பிவிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

English summary
Sources close to Ajith said that Thala doesn't have any idea of entering politics and this news that he is Jaya's heir is denitely nothing but rumour.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil