»   »  கணவருக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் மனைவியா அமலா பால்?

கணவருக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் மனைவியா அமலா பால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருட்டுப் பயலே 2 படத்தில் கணவரை ஏமாற்றும் மனைவியாக அமலா பால் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் திருட்டுப் பயலே 2. சுசி கணேசன் இயக்கியுள்ள இந்த படத்தால் தனது இமேஜ் கூடும் என்று எதிர்பார்க்கிறார் அமலா பால்.

Is Amala Paul playing this character in Thiruttu Payale 2?

படத்தில் அமலா பாலுக்கு கணவராக பிரசன்னா நடித்துள்ளாராம். கணவர் பிரசன்னாவை ஏமாற்றிவிட்டு போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் மனைவியாக அமலா பால் நடித்துள்ளாராம்.

திருட்டுப் பயலே படத்திலும் மாளவிகா தனது கணவருக்கு தெரியாமல் அப்பாஸுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. திருட்டுப் பயலே 2 படத்திலும் அது தொடர்கிறது போல.

இந்நிலையில் மீண்டும் சுசி கணேசன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் அமலா பால்.

English summary
Buzz is that Amala Paul has acted as a cheating wife in Susi Ganesan's upcoming movie Thiruttyu Payale 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil