»   »  விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற தூண்டிவிட்டதே அமலா பாலோட அம்மாவாமே?

விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற தூண்டிவிட்டதே அமலா பாலோட அம்மாவாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அமலா பால் தனது கணவர் ஏ.எல். விஜய்யை பிரிய அவரின் தாய் ஆன்சி பால் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை அமலா பால் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்துவிட்டார். இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

[அடுத்த ரவுண்டுக்கு ரெடியான அமலாபால்... புதிய கலக்கல் போட்டோக்கள்]

இந்நிலையில் அவர்கள் பிரிய புதுக்காரணம் கூறப்படுகிறது.

காரணம்

காரணம்

விஜய், அமலா பால் பிரிய பல காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் அமலாவோ இது குறித்து மவுனமாக இருந்து வருகிறார். நம்பிக்கையும், நேர்மையும் மீறப்பட்டதால் பிரிந்துவிட்டதாக விஜய் தெரிவித்திருந்தார்.

அமலாவின் அம்மா

அமலாவின் அம்மா

விஜய்யும், அமலா பாலும் பிரிய அவரின் தாய் ஆன்சி பால் தான் காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அமலாவின் வெற்றிகரமான திரையுலக பயணம் அவரது திருமணத்தால் பாதிக்கப்பட்டுவிட்டதாக ஆன்சி நினைத்தாராம்.

திருமணம்

திருமணம்

திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை என்பது ஆன்சியின் எண்ணம். ஆன்சிக்கு அமலா தென்னிந்தியாவின் டாப் ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த நேரம் பார்த்து அமலா காதல், திருமணம் என்று செட்டிலாகிவிட்டார்.

பிரிந்துவிடு

பிரிந்துவிடு

திருமண பந்தம் தொடர்ந்தால் உன்னால் நடிப்பில் பெரிய ஆளாக முடியாது. அதனால் கணவரை பிரிந்து வந்துவிடு என்று ஆன்சி அமலா பாலை மூளை சலவை செய்ததாக கூறப்படுகிறது.

வட சென்னை

வட சென்னை

தனுஷின் வட சென்னை படத்தில் அமலா பால் தான் ஹீரோயின் என்றார்கள். இந்நிலையில் அந்த படத்தில் அமலா இல்லை என்று ஒரு வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது.

English summary
According to reports, Amala Paul's mother Ancy played a major role in her getting separated from AL Vijay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil