»   »  அனிருத்துக்கும், நகைக்கடை அதிபர் மகளுக்கும் திருமணமா?: சொல்லவே இல்ல

அனிருத்துக்கும், நகைக்கடை அதிபர் மகளுக்கும் திருமணமா?: சொல்லவே இல்ல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரின் மகளுக்கும் திருமணம் நிச்சயமாகியதாக செய்திகள் வெளியாகின.

இசையமைப்பாளர் அனிருத்தின் திருமண பேச்சுக்கள் அவ்வப்போது எழுகின்றன. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனிருத்தை சந்தித்து விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாராம்.

உடனே அனிருத்தும் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

அனிருத்துக்கும், சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரின் மகளுக்கும் திருமணம் நிச்சயமாகியதாக செய்திகள் வெளியாகின. அந்த பெண் அனிருத்தின் தீவிர ரசிகை என்று கூறப்பட்டது.

அனிருத்

அனிருத்

என்ன அனிருத், உங்களுக்கு திருமணமாமே என்று கேட்டதற்கு அப்படியா, சொல்லவே இல்லை என்று கேட்டவர்களையே அவர் கலாய்த்துள்ளார். அதாவது திருமண செய்தி வெறும் வதந்தி.

திருமணம்

திருமணம்

தற்போதைக்கு இசையில் மட்டுமே என் கவனம் உள்ளது. திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. அதுவும் விரைவில் என் திருமண செய்தி நிச்சயம் வராது என்கிறார் அனிருத்.

விவேகம்

விவேகம்

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் படத்திற்கு அனிருத் தான் இசை. இந்த படத்தில் தனது இசை அனைவரும் பாராட்டும்படி இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறார் அனிருத்.

English summary
Music director Anirudh has rubbished the rumour that he is engaged to a rich girl from Chennai who is his ardent fan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil