»   »  லெ மஸ்க்... எந்த நிலையில் இருக்கிறது ஏ ஆர் ரஹ்மான் இயக்கும் ஹை டெக் புதுப்படம்?

லெ மஸ்க்... எந்த நிலையில் இருக்கிறது ஏ ஆர் ரஹ்மான் இயக்கும் ஹை டெக் புதுப்படம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வர்ச்சுவல் ரியாலிட்டி... அதாவது ஒரு விஷயத்தை நேரில் போகாமலேயே, இருக்கும் இடத்திலிருந்தபடியே பார்ப்பது, உணர்வது, அனுபவிக்கும் புதிய தொழில்நுட்பம். எந்திரன் படத்தில் எங்கோ இருக்கும் சிட்டி ரோபோவுடன் இருந்த இடத்திலிருந்தபடி நேரில் பேசுவாரே விஞ்ஞானி வசீகரன்... அந்த மாதிரி.

இப்படி ஒரு தொழில்நுட்பத்தில் புதிய படம் ஒன்றை ஆங்கிலத்தில் உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இயக்கம், இசை எல்லாம் அவரே. அவருக்கு தயாரிப்பு மற்றும் தொழில் நுட்ப ரீதியில் கை கொடுக்க முன்வந்தன பெரிய பெரிய சர்வதேச நிறுவனங்கள்.

Is any progress in AR Rahman's Le Musk?

கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட இந்தப் படம் எந்த நிலையில் இருக்கிறது?

"புதிய தொழில்நுட்பத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் இது. இதுவரை ஒரு படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்க மட்டுமே முடிந்தது பார்வையாளர்களால். ஆனால் லெ மஸ்க் படத்தைப் பொறுத்தவரை, அதன் காட்சிகளில் நீங்களும் பங்கெடுப்பதைப் போன்ற உணர்வைத் தரும் தொழில்நுட்பம் பயன்படுத்தபட்டு வருகிறது. முழுமையடைய இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. 2018 ஆரம்பத்தில் படம் வெளியாகும்," என்கிறார்கள், ரஹ்மானுக்கு நெருக்கமானவர்கள்.

இந்தியாவில் வர்ச்சுவர் ரியாலிட்டி தொழில்நுட்ப வசதி கொண்ட மால்களைக் கொண்ட பிவிஆர் நிறுவனம் இந்தப் படத்துக்காக ரஹ்மானுடன் கைகோர்த்துள்ளது.

லெ மஸ்க் படத்தின் கதையை உருவாக்கியிருப்பவர் ரஹ்மானின் மனைவி சாய்ரா. நோரா அர்னெஸடர், கய் பர்னட், முனிரிம் ஜஹன்புர், மரியம் ஜோராபியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, இதே தொழில்நுட்பத்தில் இந்திய நடனங்கள் சார்ந்த படம் ஒன்றையும் இயக்கும் திட்டத்தில் உள்ளார் ரஹ்மான்.

English summary
The latest update on AR Rahman's Le Musk which is making with the new virtual reality technology

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil