பீஸ்ட் ஃபிளாப் படமா...யார் சொன்னது...உண்மையை உடைத்து சொல்லும் உதயநிதி
சென்னை : பீஸ்ட் படம் தோல்வி ஃபிளாப் ஆகி விட்டதாக பலரும் கூறி வருகின்றனர். தற்போது பீஸ்ட் படம் எத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளது என்பது மட்டுமே அனைவரின் கேள்வியாக இருந்து வருகிறது.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. பான் இந்தியா படமாக மொத்தம் 5 மொழிகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களே பெற்றது.
பெரும்பாலானவர்கள் திரைக்கதையில் டைரக்டர் நெல்சன் சொதப்பியதே படத்தின் தோல்விக்கு காரணம் என கூறினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படம் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறி விட்டதாக பலர் குற்றம்சாட்டினர். திரையுலகை சேர்ந்த பலரே பீஸ்ட் படத்தை கடுமையாக விமர்சித்தனர். அதே சமயம் விஜய்க்கு ஆதரவாக ஏராளமானோர் பேசினர்.

வச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்
தற்போது வரை பீஸ்ட் படத்தை கலாய்த்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்களும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். ஓய்வுபெற்ற விமானப்படை விமானிகள் சிலரும், பல நாடுகளைச் சேர்ந்த நெட்டிசன்களும் பீஸ்ட் படத்தின் க்ளைமாக்சில் விஜய் போர் விமானம் ஓட்டுவதை கிண்டல் செய்திருந்தனர். இதற்கு பாலிவுட் படங்களின் பல வீடியோக்களை பகிர்ந்து, இதெல்லாம் லாஜிக் மீறல் இல்லையா என கேட்டு வச்சு செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

250 கோடி வசூலித்த பீஸ்ட்
சன் பிக்சர்ஸ் தயாரித்த பீஸ்ட் படம் ஃபிளாப் ஆனதாக பலர் விமர்சித்தனர். ஆனால் இந்த படம் 250 கோடிகளை வசூல் செய்தது. படம் 100 கோடி வசூலை தாண்டியதுமே படக்குழுவினரை தனது வீட்டிற்கே அழைத்து விருந்து கொடுத்தார் விஜய். இந்த போட்டோக்கள் இணையத்தில் பரவி செம டிரெண்ட் ஆனது. நெல்சன் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு தங்களின் ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறினர்.

பீஸ்ட் ஃபிளாப் படமா
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய படத்தின் விநியோகஸ்தரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், பீஸ்ட் ஃபிளாப் ஆகி விட்டதாக சிலர் கூறி வருகின்றனர். ஆனால் பீஸ்ட் படம் உண்மையில் எவ்வளவு கலெக்ஷன் பார்த்தது என்பது எனக்கும், சன் பிக்சர்சிற்கும் தான் தெரியும். பீஸ்ட் படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி அடைந்த படம். கேஜிஎஃப் 2 பிளாக் பஸ்டர் படம் என்பதில் சந்தேகமில்லை. வேறு மொழியில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் ஹிட் ஆகி, வசூலை அள்ளி குவித்த படம் என்றார்.

சரியான பதிலடி
இதற்கு முன் மற்றொரு பேட்டியிலும் பீஸ்ட் படம் தோல்வி கிடையாது. அது வெற்றி படம் தான் என உதயநிதி அடித்து கூறி உள்ளார். பீஸ்ட் ஃபிளாப் படம் என கூறி வருபவர்களுக்கு சரியான பதிலடியாக உதயநிதியின் பேட்டி அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











