என்னது...பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் இன்று வருதா...ட்விட்டரை அதகளப்படுத்தும் ரசிகர்கள்

சென்னை : விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இதனால் ட்விட்டரில் #BeastFirstSingle ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் திணறடித்து வருகிறார்கள்.

Recommended Video

Beast Update கொடுத்த VTV Ganesh | Jiiva, Nelson Dilipkumar

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

விறுவிறுப்பான ஷுட்டிங்

விறுவிறுப்பான ஷுட்டிங்

அதற்கு பிறகு படத்தின் எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் ஜார்ஜியா, டெல்லி, சென்னை என பல இடங்களில் நடத்தப்பட்டது. படத்தின் க்ளைமாக்ஸ் ரஷ்யாவில் எடுக்கப்பட உள்ளதாக முதலில் கூறப்பட்டது. பிறகு அதுவும் மாற்றப்பட்டது.

ஏப்ரல் மாத ரிலீஸ்

ஏப்ரல் மாத ரிலீஸ்

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் 100 வது நாள் ஷுட்டிங்கின் போது விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இசைக்கருவிகள் இசைத்தபடி இருந்த போட்டோ வெளியாகி இணையத்தை கலக்கியது. இதற்கிடையில் பீஸ்ட் ஷுட்டிங் முடிந்து விட்டதாகவும் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியானது. பிறகு ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

ப்ரோமோ வீடியோ வருமா

ப்ரோமோ வீடியோ வருமா

ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதால் பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஃபஸ்ட் சிங்கிள் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் வரிகளை விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் தான் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக டாக்டர் பட ப்ரோமோ போல, அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார், விஜய் தோன்றும் ப்ரோமோ வீடியோ ஒன்றும் தயாராக உள்ளதாக தகவல் பரவியது.

இன்று பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளா

இன்று பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளா

ஆனால் அப்படி எந்த ப்ரொமோவும் வெளியிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இன்று மாலை பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக ட்விட்டரில் தகவல் பரவி வருகிறது. இதனால் #BeastFistSingle என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.

நல்ல கிளப்பி விடுறாங்கப்பா

நல்ல கிளப்பி விடுறாங்கப்பா

அதே சமயம் இன்று பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்படுவது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழு சார்பில் வெளியிடப்படவில்லை. ஜனவரி 10ம் தேதி பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X