Don't Miss!
- News
"அந்த 3 வார்த்தை".. கவனிச்சீங்களா, மோடியை வைத்துக் கொண்டே கெத்து காட்டிய முதல்வர்.. டென்ஷனில் பாஜக
- Finance
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Technology
Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்.. ஆரஞ்சு நிறத்தில் அட்டகாச லுக்.. எப்போ வாங்கலாம்?
- Automobiles
நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்... இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குக் வித் கோமாளி சீசன் 3ல் நடிகை பாவனா பங்கேற்கிறாரா? ரக்ஷன் எடுத்த போட்டோ செம டிரெண்டிங்!
சென்னை: விஜய் டிவியில் ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி இன்று முதல் ஆரம்பமாகிறது.
இந்நிலையில், நடிகை பாவனா மேனன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
இதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்ஷன் ஷேர் செய்த அந்த ஒரு போட்டோ தான் என்றும் கூறுகின்றனர்.
பாரதி கண்ணம்மா செட்டில் புகுந்து கலாய்த்த குக் வித் கோமாளி பாலா... வேற லெவல் என்டர்டெயின்மெண்ட்

டிரெண்டிங்கில் குக் வித் கோமாளி
#CookWithComali3 என்ற ஹாஷ்டேக்கை போட்டு குக் வித் கோமாளி ரசிகர்கள் அதன் 3வது சீசனை வரவேற்று வருகின்றனர். ஜனவரி 22ம் தேதியான இன்று இரவு 9.30 மணிக்கு நிகழ்ச்சி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகிறது. விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

கண்ணம்மா முதல் மனோபாலா வரை
பிக் பாஸ் போட்டியாளர்களை விட ஏகப்பட்ட சினிமா பிரபலங்களையும் ரசிகர்களின் ஃபேவரைட் பிரபலங்களையும் குக் வித் கோமாளி கடந்த இரு சீசன்களாக களமிறக்கி வந்ததை போலவே இந்த சீசனிலும் களமிறக்கி உள்ளது. பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து திடீரென வெளியேறிய ரோஷினி ஹரிபிரியன், 'அசுரன்' அம்மு அபிராமி, சார்பட்டா பரம்பரை சந்தோஷ், கிரேஸ் கருணாஸ், மனோபாலா என ஏகப்பட்ட பிரபலங்கள் களமிறங்கி உள்ளனர்.

பாவனா பங்கேற்கிறாரா
தீபாவளி, ஜெயம்கொண்டான், ஆர்யா, அசல் என ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனா மேனன் குக் வித் கோமாளி சீசன் 3ல் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாரா என்கிற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழக்கும் ரக்ஷன் தான்.

ரக்ஷன் பாவனா புகைப்படம்
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ள இன்று தொகுப்பாளரும் நடிகருமான ரக்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பாவனாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்யததே ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு கேள்வி எழ காரணம் எனக் கூறுகின்றனர். ஆனால், நடிகை பாவனா பங்கேற்பது போல எந்தவொரு புரமோவும் வெளியாகாத நிலையில், சமீபத்தில் பாவனாவை சந்தித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது ஷேர் செய்திருக்கிறார் என்றும் சில ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

ஜாலிக்கு கியாரண்டி
எது எப்படியோ குக் வித் கோமாளி சீசன் 3லும் சிவாங்கி, மணிமேகலை, கேபிஒய் பாலா, மனோபாலா என ஏகப்பட்ட பிரபலங்கள் இருக்கும் நிலையில், கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் சிரிப்புக்கு கியாரண்டி நிச்சயம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி செம டஃப் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.