»   »  பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி நடக்கிறதா?: உண்மையை சொன்ன காஜல்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி நடக்கிறதா?: உண்மையை சொன்ன காஜல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி தான் நடக்கிறதா என்பதற்கு பதில் அளித்துள்ளார் காஜல்.

வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றவர் நடிகை காஜல் பசுபதி. அவர் காயத்ரி போன்று அடாவடி செய்வார் என்று எதிர்பார்த்தால் அமைதியாக இருந்துவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை எலிமினேட் செய்யப்பட்டார் காஜல்.

ஸ்க்ரிப்ட்

ஸ்க்ரிப்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி நடக்கிறது என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நீங்கள் நினைப்பது போன்று ஸ்க்ரிப்ட் படி நடக்கவில்லை என்று காஜல் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் நான் யாருக்கு பதிலாகவும் இல்லை. நான் நானாகவே இருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக என்னால் போலியாக இருக்க முடியாது என்கிறார் காஜல்.

மக்கள்

மக்கள்

நான் யாராக இருக்கிறேனோ அதற்காக மக்கள் என்னை விரும்பினாலே போதும். உங்களின் அன்புக்கு நன்றி. சினேகனை தான் குறி வைத்தேன். ஆனால் அவர் தந்திரமானவர் என்று காஜல் தெரிவித்துள்ளார்.

சினேகன்

சினேகன்

சினேகன் எப்பொழுதுமே முதுகிற்கு பின்னால் தான் பேசுவார், புறம் பேசுவார். மக்களின் முகத்திற்கு முன்னால் பேசும் தைரியம் அவருக்கு இல்லை. அதான் தப்பிச்சுட்டான் என்று காஜல் கூறியுள்ளார்.

English summary
Kajal Pasupathi said that Big Boss reality show is not scripted like people think.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil