புது தகவலா இருக்கே...டைரக்டர் அவதாரம் எடுக்கும் பிக்பாஸ் பிரபலம்

சென்னை : பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு தான் பலர் நடிகர், நடிகைகள் திரையுலகில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைத்து பிஸியாகி விடுகின்றனர்.

Is bigg boss fame Suresh Chakravarthy to turn director

ஓவியா, ஹரிஷ் கல்யாண், ஆரவ், ஆரி, ரைசா வில்சன் என பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே பாப்புலர் ஆகி உள்ளனர். சோஷியல் மீடியாவிலும் இவர்களை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி பிரபலமானவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒருவர்.

பிக்பாஸ் சீசன் 4 ல் புகழ்பெற்ற போட்டியாளர்களில் இவரும் ஒருவர். அந்த போட்டியில் இவர் விளையாடிய விதம், இவரின் பேச்சுக்கள் பலரின் மனதையும் கவர்ந்து விட்டது. கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மிக வயதான போட்டியாளரும் இவர் தான்.

அதனால் பலரும் இவரை செல்லமாக சுரேஷ் தாத்தா, மொட்டை தாத்தா என அன்பாக அழைக்கப்படுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மம்முட்டி நடித்த அழகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். வெளிநாட்டில் தொழிலதிபராகவும் இருந்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி சினிமாக்கள் மற்றும் டிவி சீரியல்கள் பலவற்றில் நடித்துள்ளார். சன் டிவி.,யில் இவர் தொகுத்து வழங்கிய பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அதைத் தொடர்ந்து பல சேனல்களில் பல டிவி ஷோக்களை தொகுத்து வழங்கி உள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் விஷாலின் துப்பறிவாளன் 2 படத்திலும் நடித்திருந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வசந்தபாலன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் வனிதா விஜயக்குமார், அறந்தாங்கி நிஷா ஆகியோரைத் தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியும் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், சுரேஷ் சக்கரவர்த்தி டைரக்டராக அவதாரம் எடுக்க போவதாகவும், அதுவும் முதல் படமாக மறைந்த புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகியும், நடிகையுமான எம்.எஸ்.சுப்பலட்சுமியின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க போவதாக தகவல் பரவி வருகிறது.

இது பற்றி சுரேஷிடம் கேட்டதற்கு, வழக்கமான தனது பிரம்மாண்ட சிரிப்பை பதிலாக கொடுத்தார். மேலும் இந்த தகவலை மறுத்த அவர், அந்த தகவல் தனக்கே புதிதாக இருப்பதாக தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X