கமலுக்காக தான் தள்ளி போகிறதா பிக்பாஸ் சீசன் 6? ...குழப்பத்தில் ரசிகர்கள்

சென்னை : பிக்பாஸ் 6 எப்போது துவங்கப்படும், யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை இதுபற்றி அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Recommended Video

Thamarai Selvi சீக்கிரம் வெளிய போயிட்டா Priyanka First live After Bigg Boss

முந்தைய இரண்டு சீசன்கள் கொரோனா காரணமாக தள்ளி போன நிலையில் இந்த சீசன் எப்போதும் போல் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என சொல்லப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் 2 ம் தேதி துவங்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

போட்டியாளர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் நவம்பர் மாதத்திற்கு தள்ளி போவதாக கூட தகவல் வெளியானது.

தாமதத்திற்கு கமல் தான் காரணமா?

தாமதத்திற்கு கமல் தான் காரணமா?

ஆனால் இந்த தாமதம் போட்டியாளர்கள் தேர்விற்காக அல்ல, கமலுக்காக தான் இருக்கும் என ஒரு தகவல் பரவி வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். யூகங்களாக மட்டுமே தகவல்கள் வெளியாகி வருகிறதே தவிர, பிக்பாஸ் 6 பற்றி உறுதியான தகவல், அறிவிப்பு வரவில்லையே என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

கமலின் பிளான் இதுதானா?

கமலின் பிளான் இதுதானா?

கமல் தற்போது இந்தியன் 2 படத்திற்கு தயாராவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் செப்டம்பர் முதல் வாரத்திலேயே இந்தியா திரும்ப உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியா திரும்பியதும் ஷங்கரின் இந்தியன் 2 ஷுட்டிங்கில் தொடர்ச்சியாக ஒரு மாதம் பங்கேற்க கமல் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிப்ரவரி வரை ஷுட்டிங் இருக்கா?

பிப்ரவரி வரை ஷுட்டிங் இருக்கா?

அதற்கு பிறகு பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டே, இந்தியன் 2 படத்தின் வேலைகளையும் கவனிக்க உள்ளார். இந்தியன் 2 ஷுட்டிங் பிப்ரவரி மாதத்திற்கு முன்பாக முடிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது பிக்பாஸ் 6 ஃபினாலே நடப்பதற்கு முன் இந்தியன் 2 ஷுட்டிங்கை கமல் முடிக்க போவதாக சொல்லப்படுகிறது.

ஆச்சரியத்தில் ரசிகர்கள்

ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இதனால் மகேஷ் நாராயணன் உடனான படம் உள்ளிட்ட மற்ற படங்களில் பிப்ரவரி மாதத்திற்கு பிறகே கமல் கவனம் செலுத்துவார் என சொல்லப்படுகிறது. அதே சமயம் இன்னும் 3 மாத ஷுட்டிங் மட்டுமே மீதம் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது 6 மாதத்திற்கு இந்தியன் 2 ஷுட்டிங்கை நடத்த படக்குழு பிளான் செய்திருக்கிறதா என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X