ஆரவ் முதல் ராஜு பாய் வரை.. மக்களின் ஆதரவை பெற்ற பிக் பாஸ் டைட்டில் வின்னர்கள்.. இப்போ என்ன பண்றாங்க?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வரும் அக்டோபர் 9 முதல் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது.

இந்த நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கும் மேலாக வீட்டில் இருக்கும் 5 பேரில் மக்கள் செல்வாக்கு யாருக்கு இருக்கோ அவருக்குத் தான் டைட்டில் வின்னர் பட்டம் மற்றும் 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும்.

இதுவரை 5 சீசன்கள் ஒரு அல்டிமேட் சீசனும் நடந்து முடிந்துள்ள நிலையில், அந்த 6 போட்டியாளர்களின் நிலை நிகழ்ச்சிக்கு பிறகு எந்தளவுக்கு மாறி உள்ளது என்பது குறித்து இங்கே லேசாக அலசுவோம்..

பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ

பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ

உலகம் முழுவதும் பல நாடுகளில் பிக் பிரதர் என்றும் பிக் பாஸ் என்றும் இந்த ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் சல்மான் கான் தொகுத்து வழங்க இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி, பல்வேறு மாநிலங்களில் முன்னணி நடிகர்கள் தொகுத்து வழங்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 6வது சீசன் தொடங்க உள்ளது.

ஆரவ்

ஆரவ்

விளம்பர மாடலான ஆரவ் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகை ஓவியாவுடன் காதல் கொண்டு பிக் பாஸ் வீட்டில் மருத்துவ முத்தத்தை எல்லாம் அரங்கேற்றினார். டைட்டிலை வென்ற ஆரவ் பிக் பாஸ் விட்டு வெளியேறியதும் ஓவியாவை பிரேக்கப் செய்தார். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் மற்றும் ராஜபீமா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த ஆரவ்வுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்காத நிலையில், நடிகை ராஹேவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்.

ரித்விகா

ரித்விகா

பரதேசி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகாவுக்கு பா. ரஞ்சித்தின் மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. ஒரு நாள் கூத்து, கபாலி உள்ளிட்ட படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரித்விகா பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் இதுவரை டைட்டில் வென்ற ஒரே பெண் போட்டியாளர் இவர் மட்டும் தான். ஆனால், அதன் பின்னர் பெரியளவில் படங்கள் இவருக்கு அமையவில்லை. சமீபத்தில் வெளியான அமலா பாலின் கடாவர் படத்தில் கூட துணை நடிகையாகவே நடித்திருந்தார்.

முகேன் ராவ்

முகேன் ராவ்

பிக் பாஸ் சீசன் 3ஐ ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். முதல் சீசனுக்கு பிறகு மிகப்பெரிய ஹிட் அடித்த சீசன் என்றால் அது இரண்டாவது சீசன் தான். கவின், தர்ஷன், லாஸ்லியா, சாண்டி, வனிதா, மீரா மிதுன் என ஏகப்பட்ட போட்டியாளர்கள் இருந்த நிலையிலும், முகேன் ராவ் டைட்டிலை கடைசி வரை போராடி கைப்பற்றினார். வெற்றி எனும் படத்தில் ஹீரோவாக நடித்த முகேன் ராவுக்கு அந்த படம் ஓடாத நிலையில், ஆல்பம் பாடல்களில் அடியே ஒத்த தாமரை என டான்ஸ் ஆடி வருகிறார்.

ஆரி அர்ஜுனன்

ஆரி அர்ஜுனன்

தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற கமல்ஹாசனிடமே ஆரி ஆரி என ரசிகர்கள் கோஷம் போடும் அளவுக்கு மக்கள் சக்தியை அதிகளவில் கொண்ட ஆரி அர்ஜுனன் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை பகவான் பட போஸ்டர், எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான் என ஏகப்பட்ட பட அப்டேட்களை வெளியிட்டே ரசிகர்களை தேற்றினார். ஆனால், வெளியே வந்த பிறகு 5வது சீசன் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் முடிந்தும் இன்னும் ஆரி நடித்த ஒரு படமும் வெளியாகவில்லை. நெஞ்சுக்கு நீதி படத்தில் ஒரு நல்ல ரோல் மட்டுமே அவருக்கு கிடைத்தது.

ராஜு ஜெயமோகன்

ராஜு ஜெயமோகன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் 3 வாரங்களுக்கு ரசிகர்களை கவர்ந்து விட்டால், போதும் அதன் பிறகு அவர்களே வெற்றியடைய வைத்து விடுவார்கள் என அமைதியாகவே இருந்து டைட்டிலை தட்டிச் சென்றார் ராஜு ஜெயமோகன் என்கிற விமர்சனத்துக்கு உள்ளான ராஜு ஜெயமோகன் ராஜு வூட்ல பார்ட்டி என ஒரு நிகழ்ச்சியை நடத்தி விருந்தினராக வந்த மன்சூர் அலி கானிடமே இங்கே என்ன பண்ணிட்டு இருக்க என திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜு ஜெயமோகன் படம் இயக்குவார் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாந்து போனது தான் மிச்சம் என்கின்றனர்.

பாலாஜி முருகதாஸ்

பாலாஜி முருகதாஸ்

பிக்பாஸ் சீசன் 4ல் ரன்னர் அப் ஆக வந்த பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் அல்டிமேட் வரை எந்தவொரு வாய்ப்பும் கிடைக்காத நிலையில், அதில் கலந்து கொண்டு டைட்டில் வென்றார். லிப்ரா ரவீந்திரன் தயாரிப்பில் உருவாக உள்ள மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு அவரது நிலைமை எப்படி இருக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.

பெண் போட்டியாளர்கள் பரவாயில்லை

பெண் போட்டியாளர்கள் பரவாயில்லை

ஓவியாவுக்கு பெரிய ஆர்மி உருவானாலும், அவரால் இதுவரை பெரிய இடத்தை சினிமாவில் பிடிக்கவில்லை. அதே போலத்தான் ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோரின் நிலைமையும், ரைசா வில்சன், லாஸ்லியாவுக்கு படங்கள் கிடைத்து வருகின்றன. ஆனால், பெரிய வெற்றி தான் இன்னமும் அமையவில்லை. ஷிவானி நாராயணன் சில பெரிய படங்களை கைப்பற்றி உள்ளார். ரம்யா பாண்டியனும் கொஞ்சம் பிசியாக உள்ளார். 5வது சீசன் பெண் போட்டியாளர்களில் தாமரைச் செல்விக்குத்தான் 2 படங்கள் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். 6வது சீசன் போட்டியாளர்கள் என்ன கனவோடு உள்ளே வந்திருக்காங்களோ.. நினைச்சது நடந்தா சரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X