பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களை வெளியேற்ற இந்த யுக்தி பயன்படுத்தப்படுகிறதா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வெளியேற்ற முடிவெடுப்பது மக்களின் ஓட்டுக்கள் தான் எனக் கூறப்பட்டாலும் அதில், பல சமயங்களில் மக்களுக்கே நம்பிக்கை இல்லாத அளவுக்கு சில எவிக்‌ஷன்கள் நடைபெற்று வருகின்றன.

Recommended Video

Bigg Boss நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுகிறார் AKSHARA? | Ciby, Raju

ஸ்க்ரிப்டட் ஷோ பிக் பாஸ் இல்லை என கமல் ஒவ்வொரு சீசனிலும் சொல்லிக் கொண்டே வந்தாலும் அது முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டட் தான் என்றும் இல்லை பாதி ஸ்க்ரிப்டட் என்றும் விவாதங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன.

இதில், பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களை வெளியேற்ற இன்னொரு யுக்தியை பிக் பாஸ் குழுவே செய்து வருவதாக ஒரு தகவல் தீயாய் பரவுகிறது. அது என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

எவிக்‌ஷன்

எவிக்‌ஷன்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வாரம் ஒரு போட்டியாளரை வெளியேற்றுவது தான் இந்த கேம். கடைசி வரை மக்களின் நம்பிக்கையை பெற்று யார் அந்த வீட்டில் இருக்கிறார்களோ அதில் அதிக வாக்குகளை பெறும் அந்த ஒரு நபருக்கு டைட்டில் வின்னர் என்ற பட்டமும் பரிசும் வழங்கப்படும்.

செமி ஸ்க்ரிப்டட்

செமி ஸ்க்ரிப்டட்

பிக் பாஸ் நிகழ்ச்சி கேமராக்கள் போட்டியாளர்களை கண்காணிக்க 100 நாட்களுக்கு மேல் அந்த வீட்டில் தங்களின் இயல்பு நிலையை வெளிப்படுத்தி போட்டியாளர்கள் மக்கள் மனங்களை வெல்கிறார்களா? இல்லையா என்பது தான். இது ஸ்க்ரிப்டட் என்றும் செமி ஸ்க்ரிப்டட் என்றும் ஏகப்பட்ட விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. 100 நாட்களும் இயல்பாக இருப்பது போல எந்தவொரு நடிகனாலும் இருக்க முடியாது என்று போட்டியாளர்களே நிகழ்ச்சியில் இருக்கும் போது பல இடங்களில் பேசியுள்ளனர்.

அந்த யுக்தி

அந்த யுக்தி

பிக் பாஸ் போட்டியாளர்களை வெளியேற்ற மக்களின் ஓட்டுக்கள் எந்த அளவுக்கு பயன்படுகிறதோ அந்த அளவுக்கு மக்களின் மனதை மாற்ற பிக் பாஸ் குழுவினரால் ஒரு யுக்தி பயன்படுத்தப்படுவதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. ஒரு போட்டியாளரை அந்த வாரம் வெளியே அனுப்ப முடிவு கட்டி விட்டால் அவர்களை தவறாக காட்டத் தொடங்கிவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

வெளியே போகலாம்

வெளியே போகலாம்

மிக்சர் தின்னிகளுக்கு நடுவே சில டஃப் போட்டியாளர்கள் அதிரடியாக வெளியேற்றப்படும் போது தான் இதில் இருக்கும் சூட்சமம் புரிய வரும். டஃப் போட்டியாளர்களாக இருந்தாலும் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க அந்த போட்டியாளர் அந்த வாரம் அதீத முயற்சிகளை எடுக்கும் அளவுக்கு சில உத்தரவுகளின் பேரில் அவர் நடந்து கொள்வதே மக்கள் மத்தியில் ஓட்டுக்கள் குறைந்து அவர் அதிரடியாக வெளியேற்றப்படுகிறார் என்கின்றனர்.

இந்த வாரம் பிரியங்கா

இந்த வாரம் பிரியங்கா

ஆரம்பத்தில் அதீத சேட்டைகள் செய்து வந்த பிரியங்கா கமல் சார் கொடுத்த டிப்ஸ் காரணமாக அடக்கி வாசி அன்பு பொழியும் பிரியங்காவாக மாறினார். ஆனால், கடந்த வாரம் முதலே அவரது நடவடிக்கைகளில் திடீரென அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேவையில்லாத சண்டைகளை தினமும் போடுவது, சொல்பேச்சு கேட்காதவர் போல இரிடேட் செய்வது என மாறி வரும் பிரியங்கா இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பது இந்த ஃபார்முலா மூலம் தெரிகிறது.

பல உதாரணங்கள்

பல உதாரணங்கள்

இதற்கு முன்னதாக பல சீசன்களிலும் ஏன் இந்த சீசனிலும் இந்த யுக்திக்கு பல உதாரணங்கள் உள்ளன. அபிஷேக் ராஜா பரதநாட்டியம் எல்லாம் ஆடப் போகிறேன் என எல்லோரிடமும் தேவையே இல்லாமல் சென்று இன்ஃப்ளூயன்ஸ் செய்ய அவர் வெளியேறினார். அதுவரை நல்லா விளையாடி வந்த சுருதி திடீரென தாமரையின் காயினை எடுக்க முயற்சித்து வெளியேறினார். சுருதிக்கு பிறகு யாருமே காயினை திருடும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X