For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சியான் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்.. இப்படியொரு அதிரடி முடிவை எடுக்கப் போகிறாராம் விக்ரம்?

  |

  சென்னை: சினிமாவில் நடிப்பதில் இருந்து சியான் விக்ரம் ஓய்வு எடுக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

  Exclusive: Cobra TRAILER | Vikram | Ajay Gnanamuthu

  சினிமாவில் படாத கஷ்டங்கள் பட்டு, படிப்படியாக மேலே வந்த நடிகர்களில் சியான் விக்ரமும் ஒருவர்.

  கைவசம் கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் இருக்கும் நிலையில், இந்த ஒரு காரணத்திற்காக சினிமாவை விட்டு அவர் விலகப் போவதாக ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது.

  அப்போ பிகினி.. இப்போ நாக் நாக் வீடியோவா.. லாக்டவுனில் தம்பியுடன் சேட்டை செய்யும் தனுஷ் பட நாயகி!

  பாலா செய்த மேஜிக்

  பாலா செய்த மேஜிக்

  1990ம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி படத்தின் மூலம் அறிமுகமான விக்ரமுக்கு சினிமா நினைத்தபடி செட் ஆகவில்லை. பல தடைகளுக்கு பிறகு பாலா இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான சேது படம் மிகப்பெரிய மேஜிக்கை விக்ரம் வாழ்க்கையில் செய்தது. அந்த படத்திற்கு பிறகு, சியான் விக்ரம் என்ற அடைமொழியும் அவரை தொற்றிக் கொண்டது.

  தொடர்ந்து ஹிட்

  தொடர்ந்து ஹிட்

  சேது படத்தின் வெற்றிக்கு பிறகு, தில், ஜெமினி, தூள், சாமி, காசி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக விக்ரம் தமிழ் சினிமாவில் மாறினார். ஒவ்வொரு படங்களிலும், வித்தியாசமாகவும், உயிரைக் கொடுத்தும் நடித்து, சிறந்த நடிகராகவும் ரசிகர்கள் மனங்களை 0வென்றார்.

  ஷங்கர் இயக்கத்தில்

  ஷங்கர் இயக்கத்தில்

  பாலாவின் சேது, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் திரைப்படம் விக்ரமுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது. அம்பி, ரெமோ, அந்நியன் என மல்டிபிள் பர்சனாலிட்டி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே மிரட்டினார் விக்ரம்.

  ஐ

  அந்நியன் படத்தைத் தொடர்ந்து வித்தியாசமான கதைகள் மற்றும் கமர்ஷியல் படங்களிலும் நடித்து வந்த விக்ரம், மீண்டும் ஷங்கர் உடன் இணைந்து ஐ படத்தில் அதுக்கும் மேல என்று சொல்லும் அளவுக்கு ஏரிக்கரை லிங்கேசனாகவும், சூப்பர் மாடல் லீயாகவும், கோரமான முகத்துடன் கூனனாகவும் நடித்து அசத்தினார்.

  20 கெட்டப்புகள்

  20 கெட்டப்புகள்

  விக்ரம் வித்தியாசமான கெட்டப் போட்டு நடிப்புக்கு தீனி போட்டு நடிக்கும் படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து வந்துள்ளன. இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள கோப்ரா படத்தில் 20 கெட்டப்புகளில் சியான் விக்ரம் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் 7 விதமான கெட்டப்புகள் வெளியிடப்பட்டு, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

  நடிக்கப் போவதில்லை

  நடிக்கப் போவதில்லை

  தமிழ் சினிமாவில் சிவாஜி, கமல் போன்ற நடிப்பு ஜாம்பவான்களுக்கு அடுத்து நடிப்பு அசுரனாக திகழும் விக்ரம் திடீரென சினிமாவில் நடிப்பதில் இருந்து ஓய்வெடுக்கப் போவதாக ஷாக்கிங் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. அது மட்டும் உண்மையானால், நிச்சயம் அது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கும்.

  எதற்காக

  எதற்காக

  கோப்ரா படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கும் சியான் விக்ரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து வருகிறார். மேலும், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படமும் இவரது கால்ஷீட்டுக்காக காத்துக் கிடக்கிறது. இந்நிலையில், எதற்காக இப்படியொரு முடிவை விக்ரம் எடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  மகனுக்காக

  மகனுக்காக

  தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்து தமிழ் சினிமாவில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகமானார். மகன் துருவ் விக்ரமின் சினிமா எதிர்காலத்திற்காக, நடிப்பதை விட்டுவிட்டு, மகனின் சினிமா கரியரை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்.

  English summary
  Now, the latest report according to an online portal is that 'Cobra' actor Vikram is planning to quit acting to concentrate on his son Dhruv Vikram's cinema career.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X