»   »  வசூல் ரேஸ்... பாகுபலி - 2 ஐ முந்திவிட்டதா தங்கல்?

வசூல் ரேஸ்... பாகுபலி - 2 ஐ முந்திவிட்டதா தங்கல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி -2 இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்த படம். இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை வெளியான படங்கள் நிகழ்த்திய எல்லா சாதனைகளையும் முறியடித்துள்ளது.

வசூலில் 1000 கோடியை தொட்ட முதல் திரைப்படம் பாகுபலி -2. இப்போது ரூ 2000 கோடியை நெருங்கிவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன.


Is Dangal overtakes Baahubali 2?

இந்த நிலையில் பாகுபலி வசூலை தங்கல் முந்திவிட்டதாக ஒரு பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.


ஆமிர்கானின் தங்கல் படம் ஏற்கெனவே ரூ 700 கோடிக்கு மேல் வசூலிருத்திருந்தது. பாகுபலி வெளியான நேரத்தில் தங்கல் படத்தை சீனாவில் வெளியிட்டார் ஆமிர்கான்.


அங்கே தங்கல் சூப்பர் ஹிட். இதுவரை ரூ 500 கோடிக்கு மேல் குவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து பாகுபலி 2, தங்கல் இரண்டுக்கும் வசூலில் பெரும் போட்டி நிலவுவதாகக் கூறப்பட்டது.


தங்கல் படம் 1600 கோடியைத் தாண்டிவிட்டதாக தவறான விவரங்களை சிலவர் பரப்பி வருவதாக பாக்ஸ் ஆபீஸில் தெரிவிக்கின்றனர்.


இப்போதைய நிலவரப்படி, பாகுபலி 2 ரூ 2000 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தங்கல் ரூ 1500 கோடியை நெருங்கியுள்ளது. பாகுபலி 2 படத்தை சீனாவில் வெளியிடும் வேலைகளில் மும்முரமாக உள்ளனர். பாகுபலி 2 சீனாவில் வெளியானால் அது மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

English summary
Is Aamir Khan's Dangal overtakes Baahubali 2 in Box Office? Here are the facts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil