»   »  ஒரு நடிகையும் அவரது அக்கா பேயும்... இது தேவி பட கலாட்டா!

ஒரு நடிகையும் அவரது அக்கா பேயும்... இது தேவி பட கலாட்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபுதேவா தனது சொந்த தயாரிப்பில் ஏஎல்விஜய் இயக்கத்தில் தமன்னாவுடன் ஜோடியாக நடிக்கும் படம் தேவி. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹீரோவாக அதுவும் இன்னொருவர் இயக்கத்தில் நடிக்கிறார்.

Is Devi movie Nayanthara's story?

இந்த படத்தின் கதை பற்றிய சர்ச்சைகள் இன்னமும் நீடிக்கின்றன. பிரபுதேவாவின் முன்னாள் காதலியான நயன் தாராவின் சொந்தக் கதை தான் இது. பிரபுதேவா தங்கள் காதல் பிரிந்ததற்கான தன் தரப்பு நியாயங்களை அப்படியே புட்டு புட்டு வைத்திருக்கிறார் என்ற ரீதியில் தகவல்கள் வருகின்றன.

ஆனால் படம் உண்மையில் ஹார்ரர் கதையாம். நடிகை மற்றும் அவரது அக்கா என தமன்னாவுக்கு இரண்டு ரோல்கள். அக்கா இறந்து பேயாக வருகிறார். தங்கையின் காதலன் பிரபுதேவாவுக்கு அக்கா பேய் எப்படி தங்கையின் ஃப்ராடுத்தனங்களைச் சொல்லி உதவுகிறது என்பது கதையாம்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் தேவி படத்தின் ஆடியோவை வெளியிடப் போவது ஒரிஜினல் தேவி. அதாவது ஸ்ரீதேவி.

ஆகஸ்ட் 15 ம் தேதி விஜயவாடாவில் நடக்கும் விழாவில் ஸ்ரீதேவி கலந்துகொண்டு ஆடியோவை வெளியிடவிருக்கிறார்.

English summary
Sources say that the story of Prabhu Deva's Devi is based on Nayanthara's love affair.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil