அட கொடுமையே...இவர் வாய்ப்பையா தனுஷ் தட்டிகிட்டு போயிட்டார் ?
சென்னை : டைரக்டர் இலன், நடிகர் ஹரிஷ் கல்யாண், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ரொமான்டிக் காமெடி படமாக உருவானது பியார் பிரேமா காதல். இந்த படம் வெற்றிபடமாக அமைந்தது. இதனால் இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணை முடிவு செய்யப்பட்டது.
இந்த வெற்றி கூட்டணியின் இரண்டாவது படத்திற்கு ஸ்டார் என பெயரிடப்பட்டது. இந்த படத்தின் வேலைகள் 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது. ஸ்டார் என்ற டைட்டிலில் பிரசாந்த் ஏற்கனவே நடித்த படமும் ஓரவு பேசப்பட்டதால் இந்த படத்திற்கு அதே டைட்டிலை வைத்துள்ளனர்.

கைவிடப்பட்டதா ஸ்டார் படம்
ஆனால் நிதி நெருக்கடி போன்ற சில பிரச்சனைகள் காரணமாக ஸ்டார் படம் கைவிடப்பட்டதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. அதே சமயம் டைரக்டர் இலன், டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷை இயக்கும் பெற்றுள்ளார். அதனால் தான் ஸ்டார் படத்தின் வேலைகளை கைவிட்டு விட்டதாகவும் கூறப்பட்டது.

ஹரிஷுக்கு பதில் தனுஷா
லேட்டஸ்ட்டாக வெளியான தகவலின்படி, ஸ்டார் படத்தில் தான் ஹரிஷ் கல்யாணுக்கு பதில் ஹீரோவாக தனுஷை நடிக்க வைக்க போகிறார்களாம். இந்த படத்தின் வேலைகள் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட உள்ளதாம். அதே சமயம், படத்தின் தயாரிப்பாளரும் தற்போது நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வந்து விட்டாராம்.

போட்டி போடும் தயாரிப்பாளர்கள்
இதற்கிடையில் இந்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதால் புதிய தயாரிப்பாளர்கள் பலர் இந்த படத்தை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார்களாம். இலன் இயக்கத்தில் தனுஷை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என பணத்தை முதலீடு செய்பவர்களும் தீவிரமாக பேசி வருகின்றனராம்.

ஸ்டார் கதையில் தனுஷ்
இதனால் இலன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது கிட்டதட்ட முடிவாகி விட்டது. ஸ்டார் படத்தின் கதையிலேயே தனுஷை நடிக்க வைக்க முயற்சி நடப்பதால் புதிய கதை எதையும் அவர் தயார் செய்யவில்லையாம். தனுஷ் ஓகே சொல்லிவிட்டால் படத்தின் வேலைகளை துவக்க காத்திருக்கின்றனர்.

அப்போ ஏற்கனவே வெளியிட்ட ஃபஸ்ட்லுக்
ஆனால் ஹரிஷ் கல்யாணை வைத்து ஏற்கனவே ஸ்டார் படத்தின் ஃபஸ்ட்லுக்கை வெளியிட்டு விட்டனர். தளபதி ரஜினி, சிவப்பு ரோஜாக்கள் கமல், ஸ்வதேஸ் ஷாருக்கான் ஆகிய கெட்அப்களில் ஹரிஷ் கல்யாண் இந்த போஸ்டர்களில் தோன்றி இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், ஆர்வத்தையும் தூண்டியது. சென்னையில் நடப்பது போல் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

பிஸியாக இருக்கும் தனுஷ்
இந்த கதையை தற்போது தனுஷுக்கு ஏற்றாற் போல் மாற்றி வருகிறாராம் டைரக்டர் இலன். ஆனால் தனுஷ் தற்போது, மாறன், திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக கமிட்டாகி, பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்ல தெலுங்குல இந்தியிலும் சில படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இலனுக்கு ஓகே சொல்வாரா தனுஷ்
படங்களில் நடிப்பதுடன் மீண்டும் படம் இயக்கவும் தனுஷ் முடிவு செய்துள்ளார். அதோடு விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் பாடல் எழுதி, பாடவும் போகிறார் என கூறப்படுகிறது. நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல் எழுதுவது, பாடுவது என ஒரே சமயத்தில் பல வேலைகளை கவனித்து வருகிறார் தனுஷ், இந்த சமயத்தில் இலன் இயக்கும் ஸ்டார் படத்தில் நடிக்க தனுஷ் ஓகே சொல்வாரா என்பதும் கேள்விக்குறியாக தான் உள்ளது.


Click it and Unblock the Notifications











