அட இவரு பாட போறாரா...பாடகராக அவதாரம் எடுக்கும் வாரிசு நடிகர்...யார் தெரியுமா?

சென்னை : நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவிற்கு நடிக்க வருவது புதிதல்ல. சிவாஜி காலம் தொட்டு தற்போது வரை இது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இப்படி ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமான ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து ஜொலித்து வருகின்றனர்.

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற டாப் ஹீரோக்கள் தங்கள் படங்களில் சொந்த குரலில் பாடல் பாடி வருகின்றனர். சிவகார்த்திகேயன் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்திற்கும், சந்தோஷ் சிவன் வலிமை படத்திற்கும் பாடல் எழுதி உள்ளனர்.

பாடகராகும் துருவ்

பாடகராகும் துருவ்

ஆனால் டாப் ஹீரோ ஒருவரின் வாரிசு, ஹீரோவாக அறிமுகமானதுடன் பாடகராகவும் அவதாரம் எடுக்க போகிறாராம். அப்படி ஹீரோவாக இருந்து பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளவர் வேறு யாரும் இல்லை விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தான். ஆதித்யா வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான துருவ் விக்ரம். தற்போது அப்பா விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விரைவில் ரிலீஸ் தேதி

விரைவில் ரிலீஸ் தேதி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் மகான் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

அதாவது சந்தோஷ் நாராயணனின் ஸ்டூடியோவில் துருவ் விக்ரம் இருப்பது போன்றும், பாட தயாராக இசையை கேட்டுக் கொண்டிருப்பது போலவும் அந்த வீடியோ அமைந்துள்ளது. இதை பார்த்து விட்டு, துருவ் விக்ரம் பாட போகிறாரா, எந்த படத்தில் பாட போகிறார் என ஆர்வமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். துருவ் பகிர்ந்துள்ள இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

வெறித்தனமான சூரையாட்டம்

வெறித்தனமான சூரையாட்டம்

மகான் படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக சூரையாட்டம் பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அனைவரையும் ஆட்டம் போட வைத்தது. இதனால் மகான் படத்தின் மூலமாகத் தான் துருவ் பாடகராக அறிமுகமாகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்த படங்களில் கமிட்

அடுத்தடுத்த படங்களில் கமிட்

மகான் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். பெயரிடப்படாத இந்த படம் கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் ஒன்றிலும் நடிக்க துருவ் கமிட்டாகி உள்ளார். இது செம ரொமான்டிக்கான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X