ரஜினிகாந்த் படத்தை இயக்க ‘நோ’ சொன்னாரா நெல்சன்.. தீயாய் பரவும் தகவல்.. அப்போ இயக்கப் போவது இவரா?

சென்னை: அண்ணாத்த படம் 200 கோடி வசூலை கடந்துள்ள நிலையில், அடுத்த படத்தை உடனடியாக தொடங்க ரஜினிகாந்த் தீர்மானித்துள்ளார்.

70 வயதை கடந்த ரஜினிகாந்த் சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கொஞ்ச மாதங்களாவது ரஜினிகாந்த் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்களும் ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்த மாதமே புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வசூல் சக்கரவர்த்தி

வசூல் சக்கரவர்த்தி

அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆகி உள்ளதாகவும் வசூல் சக்கரவர்த்தி ரஜினிகாந்த் என்றும் அந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தொடர்ந்து ஹேப்பி மோடில் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ரஜினிகாந்தின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க தயாராகி உள்ளதாகவும் ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது.

தேசிங்கு பெரியசாமி இல்லை

தேசிங்கு பெரியசாமி இல்லை

துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை நடிகர் ரஜினிகாந்த் போன் பண்ணி பாராட்டிய நிலையில், அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தார். ஆனால், தேசிங்கு பெரியசாமி சொன்ன கதை மற்றும் பட்ஜெட்டில் உடன்பாடு ஏற்பாடாத நிலையில், அவருடன் இணைந்து பணியாற்றுவது தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் இயக்குநர் பெயர்

பீஸ்ட் இயக்குநர் பெயர்

தேசிங்கு பெரியசாமி விலகிய நிலையில், அடுத்ததாக டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்கிற தகவல் ஒன்றும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் அடுத்து ரஜினியை இயக்குவாரா என எதிர்பார்க்கப்பட்டது.

நோ சொன்னாரா நெல்சன்

நோ சொன்னாரா நெல்சன்

டார்க் காமெடி படங்களை இயக்கி புகழ்பெற்று வரும் இயக்குநர் நெல்சன் இன்னமும் பீஸ்ட் படத்தை முடிக்கவில்லை என்றும், உடனடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்க தன்னால் முடியாது என்றும் ஓப்பனாகவே நோ சொல்லி விட்டார் என்கிற தகவல் சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.

பேட்டை ரிட்டர்ன்ஸ்

பேட்டை ரிட்டர்ன்ஸ்

சமீபத்தில் வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர்கள் எல்லாம் ரஜினிகாந்த் படத்தை இயக்க யோசித்து வரும் நிலையில், பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலேயே மீண்டும் ரஜினிகாந்த் நடிப்பார் என்கிற தகவலும் தற்போது கசிந்துள்ளது. மகான் படத்தை முடித்து விட்டு அடுத்த படத்தை கமீட் பண்ண காத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் ஒரு பேட்ட ஸ்டைல் படத்தை உருவாக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த மாதமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X