இன்று எத்தனை எவிக்ஷன்... கமல் பேசியதன் அர்த்தம் என்ன ?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதவரை 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2 பேர் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஜாலியாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் சண்டைகள், சண்டை, சமாதானம் என சென்று கொண்டிருக்கிறது. டாஸ்க் அனைத்திலும் சண்டை போட்டுக் கொள்ளும் போட்டியாளர்கள் வார இறுதி நாட்களில் சமாதானம் ஆகி விடுகிறார்கள்.

பாவ்னி காதல் விவகாரம்

பாவ்னி காதல் விவகாரம்

இந்த வாரம் பாவ்னி - அபினய் இடையே லவ் இருக்கா, இல்லையா என்பது தான் ஹாட் டாப்பிக்காக மாறி கடுமையான விவாத பொருளானது. இது பற்றி நேற்றைய எபிசோடில் கேட்ட கமல், ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்று சொன்ன பிறகும் ஏன் அதில் தலையிடுகிறீர்கள். அவர்களுக்குள் லவ் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என மற்ற போட்டியாளர்களிடம் கேட்டார்.

கமல் கொடுத்த அட்வைஸ்

கமல் கொடுத்த அட்வைஸ்

ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் ஏன் அதை தவறாகவே பார்க்கிறீர்கள். இது போன்ற பிரச்சனைகளை நானும் சந்தித்துள்ளேன் என அனைவருக்கும் அட்வைஸ் செய்தார். கமலின் இந்த பேச்சை பாவ்னி, பிரியங்கா ஆகியோர் பலமாக கைகளை தட்டி வரவேற்றனர். நேற்றைய எபிசோடில் நாமினேட் ஆன ஏழு பேரில் சிபி மட்டும் காப்பாற்றப்பட்டார்.

எத்தனை எவிக்ஷன்

எத்தனை எவிக்ஷன்

இந்நிலையில் நிகழ்ச்சியின் 70 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் ப்ரோமோவில் நிரூப், இமான் அண்ணாச்சி, அமீர் ஆகியோரை ஒன்றாக அமர வைத்து கமல் பேசுகிறார். இந்த மூவரில் ஒருவர் காப்பாற்றப்படலாம். ஒருவர் வெளியேற்றப்படலாம். இருவர் கூட காப்பாற்றப்படலாம். இவர்களில் ஒருவரின் பெயர் அடங்கிய கார்டு என் கையில் உள்ளது. உங்கள் அனுமதியுடன் அதை திறக்கிறேன் என சஸ்பென்ஸ் வைக்கிறார் கமல்.

ரசிகர்களின் சந்தேகம்

ரசிகர்களின் சந்தேகம்

இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் உள்ளதாக ஏற்கனவே தகவல் பரவியது. பிறகு இருவர் இல்லை, ஒருவர் தான் வெளியேற்றப்பட போகிறார். இமான் அண்ணாச்சி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கமல் இன்றைய ப்ரோமோவில் பேசியதை பார்த்தால் இரண்டு எவிக்ஷன் இருக்குமோ என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

ஏன் ராஜுவை பேசவிடவில்லை

ஏன் ராஜுவை பேசவிடவில்லை

நேற்று எதற்காக கமல், பாவ்னியை ஆதரிப்பது போல் பேசினார். ராஜுவை பேச விடாதது ஏன். ராஜு ஏதோ சொல்ல வந்து கையை உயர்த்தினார். ஆனால் கமல் அவரை பேச விடாமல், நான் சொல்லும் கருத்து உங்களுக்கு ஏற்க கூடியதாக இருக்கும். சிந்தித்து பாருங்கள் புரியும் என்று சொல்லி முடித்தார் ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நல்லா பண்றீங்கடா

நல்லா பண்றீங்கடா

சம்பந்தமே இல்லாமல் எதற்காக அண்ணாச்சி தூக்கி இருக்கிறார்கள். அண்ணாச்சி தான் இன்று வெளியேற போகிறாரோ. அப்போ கடைசி கட்டத்துக்கு முன்னாடியே அபினய் காப்பாற்றப்பட்டு விட்டாரா. நல்லா பண்றீங்கடா பிக்பாஸ் என பலர் எரிச்சலுடன் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X