பிக் பாஸ் கேமை மாற்ற ஆரம்பித்த மக்கள்.. அவங்க கேட்க ஆரம்பிச்சிட்டா மாத்தி தான் ஆகணும்!

சென்னை: கடந்த சீசனில் ஆரி வின்னர் ஆக ஆனதும் இந்த சீசனில் நடைபெறும் எலிமினேஷன்களையும் பார்க்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் மாற்ற ஆரம்பித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

ஓவர் புகழ் அடைந்த ஓவியாவையே வெளியேற்றிய பிக் பாஸ் குழு ஆரியின் மக்கள் செல்வாக்கை ஒண்ணுமே செய்ய முடியாமல் தவித்தது.

கடந்த வாரம் வயதான சின்னப் பொண்ணுவை வெளியே அனுப்பிடுவீங்க தானே என சத்தமாக கேட்க இந்த வாரமும் சின்ன பொண்ணு வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டு போடும் மக்கள்

ஓட்டு போடும் மக்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் சூப்பராக விளையாடுகிறார் என்பதை விட யார் நேர்மையாக விளையாடுகிறார் என்பதை பார்த்து தான் பெருவாரியான மக்கள் ஓட்டு போட்டு வருகின்றனர். மக்கள் என்ன தான் ஓட்டுப் போட்டாலும் கடைசியாக வெளியே யாரை அனுப்புவது எனும் முடிவை பிக் பாஸ் குழு எடுத்து வந்த நிலையில், தற்போது அதில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருப்பதை காண முடிகிறது.

ஓவியாவை வெளியேற்றி

ஓவியாவை வெளியேற்றி

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான போது முதல் நபராக ஒட்டுமொத்த ரசிகர்கள் மனங்களையும் தனது இயல்பான குணத்தால் கவர்ந்தவர் நடிகை ஓவியா தான். அவருக்கு கிடைத்த புகழ் அந்த நிகழ்ச்சியை விட அதிகமாகி போக ஒரு பக்கா டிராமா செய்து ஓவியாவை வெளியேற்றி ஒரு கேம் ஆடியது பிக் பாஸ் குழு என்கிற விமர்சனங்கள் அப்போது முன் வைக்கப்பட்டன.

ரேகா எவிக்‌ஷன்

ரேகா எவிக்‌ஷன்

கடந்த சீசனில் கலந்து கொண்ட நடிகை ரேகா தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளராக இருந்தும் சீனியர் போட்டியாளர் என்பதால் முதல் நபராக இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். ரேகாவை விட பிரபலமாகாத பல முகங்கள் அதிக ஓட்டுக்களை பெற்று சேவ் ஆனார்களா? என்கிற கேள்வியை அப்போது ரசிகர்கள் முன் வைத்தனர்.

சுரேஷ் தாத்தா

சுரேஷ் தாத்தா

அதே போல போன சீசனில் கன்டென்ட் கிங்காக இருந்த சுரேஷ் தாத்தாவையும் எந்தவொரு காரணத்தையும் சொல்லாமல் எவிக்ட் பண்ணி வெளியேற்றினார்கள். வயது முதிர்வு காரணம் என்று சொல்லப்பட்டாலும் அவர் கேம் ஆடிய அளவுக்கு கடந்த சீசனில் வேறு யாரும் விளையாடவில்லை என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்து.

ஆரியின் எழுச்சி

ஆரியின் எழுச்சி

இப்படி பிக் பாஸ் குழு தங்கள் கேமை தங்கள் இஷ்டப்படி விளையாடி கொண்டிருந்த நிலையில், ஆரியை ஒவ்வொரு வாரமும் அனைத்து போட்டியாளர்களும் வெறுத்து நாமினேஷன் செய்து கொண்டே இருந்தனர். அதே போல பல முறை சிறைக்கும் அனுப்பப்பட்டார். ஆனாலும், மக்களை தன் பக்கம் திருப்பும் முயற்சியை ஷோவுக்குள் இருந்து கச்சிதமாக செய்ய ஆரியின் எழுச்சியை பிக் பாஸ் குழுவால் தடுக்க முடியவில்லை.

அரசியலுக்காக

அரசியலுக்காக

மக்கள் மத்தியில் ஆரிக்கு கிடைத்த வரவேற்பு கமல் போகும் பொதுக் கூட்டங்களிலும் ஒலிக்கத் தொடங்கியது கடந்த சீசனில் மிகப்பெரிய எழுச்சியாக பார்க்கப்பட்டது. ஆரியின் வெற்றி கமலின் வெற்றியாக பார்க்கப்பட்டு அவருக்கு டைட்டில் கொடுக்கப்பட்டது என்றும் சிலர் விமர்சனங்களை எடுத்து வைத்தனர். ஆரியை வெளியேற்ற பிக் பாஸ் குழு நினைத்து புரமோ எடிட், ஷோ டாஸ்க் உள்ளிட்ட விஷயங்களை செய்தாலும் மக்களால் தான் ஆரி காப்பாற்றப்பட்டார். டைட்டில் வின்னர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமீதா மாரிமுத்து வெளியேற்றம்

நமீதா மாரிமுத்து வெளியேற்றம்

திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்துவுக்கு இந்த சீசனில் வழங்கப்பட்ட வாய்ப்புக்காகவும் நமீதா மாரிமுத்து தனக்கு கிடைத்த மேடையை பயன்படுத்திக் கொண்டு ஒட்டுமொத்த திருநங்கைகளின் குரலாக ஒலித்த அந்த கத சொல்லட்டுமா டாஸ்க்குக்காகவும் விஜய் டிவியை ரசிகர்கள் பாராட்டி தள்ளினர். இந்த சீசன் டைட்டில் வின்னரே நமீதா தான் என சொல்ல ஆரம்பித்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சொந்த காரணத்திற்காக அவரே வெளியேறினார் என்று கேமை மாற்றி விட்டனர்.

சின்னப் பொண்ணு சேவ்

சின்னப் பொண்ணு சேவ்

இந்த சீசனில் வயதான போட்டியாளரான சின்னப் பொண்ணு தான் இரண்டாவது வாரத்தில் வெளியேற்றப்படுவார் என்றும் வயதான போட்டியாளர்களை பிறகு ஏன் நிகழ்ச்சிக்கு கூப்பிடுறீங்க என்றும் மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்த நிலையில், சின்னப் பொண்ணுக்கு ஓட்டுக்கள் குவிந்தன. அதன் காரணமாக நாடியா சங் வெளியேறினார்.

அபிஷேக் வேண்டாம்

அபிஷேக் வேண்டாம்

பிக் பாஸ் சீசன் 5ல் மற்றவர்களை விளையாட விடாமல் கடுப்பேற்றி கொண்டிருந்த அபிஷேக் ராஜா கடந்த வாரமே குறைவான ஓட்டுக்களை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் அவர் தான் வெளியேற வேண்டும் ஆனால், அவரை காப்பாற்றத்தான் இந்த பஞ்ச தந்திர காயின் டாஸ்க்கை பிக் பாஸ் குழு கொல்லைப் புறமாக கொண்டு வந்து விட்டது என நெட்டிசன்கள் விளாசி வந்த நிலையில், மக்கள் தீர்ப்பு படியே தீர்ப்பளித்து விடலாம் என கமல் எடுத்த முடிவு காரணமாகவே அபிஷேக் இந்த வாரம் வெளியேறி இருப்பதாகவே பலர் பார்க்கின்றனர்.

எல்லாமே மாறும்

எல்லாமே மாறும்

ஓட்டுப் போடும் மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டால் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி ஆட்சியாக இருந்தாலும் சரி எல்லாம் மாறும் என்பதை மக்கள் பலமுறை நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த சீசனில் யாருக்கு மகுடத்தை சூட மக்கள் காத்திருக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X