என்னங்க சொல்றீங்க...சூர்யாவை அடுத்து இயக்க போகும் டைரக்டர்கள் பட்டியலில் இவரா?
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் நடிகராக மாறி உள்ளார் சூர்யா. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக உள்ளன.
அதுவும் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம் இந்தியில் தற்போது ரீமேக் ஆகி வரும் சமயத்தில், சூரரைப் போற்று படம் 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சூர்யா தற்போது டைரக்டர் பாலா இயக்கு வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகள் விரையில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.

மீண்டும் பிஸியாகும் சூர்யா
அமெரிக்காவிற்கு விடுமுறையை கழிக்க சென்ற சூர்யா சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். இதனால் வணங்கான் படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முடித்த பிறகு டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இத்தனை படங்களா
சிறுத்தை சிவா படத்தை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல், சுதா கொங்கரா உடன் மற்றொரு படம் என வரிசையாக கமிட்டாகி உள்ளார் சூர்யா. இதோடு லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் 3, கைதி 2 படங்களிலும் சூர்யா கமிட்டாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. பல படங்கள் சூர்யாவிற்காக காத்திருக்கிறது.

சூர்யாவின் டைரக்டர்கள் லிஸ்டில் இவரா
இந்த சமயத்தில் சூர்யாவை அடுத்ததாக இயக்க போகும் டைரக்டர் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. லேட்டஸ்ட் தகவலின் படி, பாலிவுட்டில் பிரபல டைரக்டரான Faruk Kabir, சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் கடைசியாக இயக்கிய 'Khuda Haafiz: Chapter 2 Agnipariksha'படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளை இவர் ஏற்கனவே துவக்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தி படமா? பைலிங்குவல் படமா?
மிக பிரம்மாண்டமாக இயக்கப்பட உள்ள இந்த படம் இந்தியில் எடுக்கப்பட உள்ளதா அல்லது இந்தி, தமிழ் என இரு மொழிகளிலும் எடுக்கப்பட உள்ளதா என தெரியவில்லை. இந்த படம் அடுத்த ஆண்டு துவங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதே சமயம் பாலிவுட் ஸ்டார் ஒருவருடன் இந்தியில் ஒரு படத்தை இயக்கவும் Faruk Kabir திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் கதையும் தயார் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.

குஷியான ரசிகர்கள்
ஒருவேளை Faruk Kabir - சூர்யா படம் முடிவானால், பாலிவுட்டிலும் அவருக்கு மிகப் பெரிய இடம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். இதனால் சூர்யா, இந்திய அளவில் மெகா ஸ்டார் அந்தஸ்தை பெறுவார் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











