குட்லக் சகி ஓடிடி.,யில் ரிலீசா...அதிர்ச்சியில் படக்குழு
ஐதராபாத் : கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் குட் லக் சகி. இந்த படம் நேரடியாக ஜீ 5 தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக சமீபத்தில் வதந்திகள் பரவின. ஆனால் இது தவறான தகவல் என படத்தில் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தயாரிப்பாளர் சுதிர் சந்திர பத்ரி கூறுகையில், விளையாட்டு ரொமான்டிக் காமெடி படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்வது சரியானதாக இருக்காது. இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன். படத்தை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யும் எண்ணம் ஏதாவது வந்தால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அப்டேட் தருவோம் என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே வெளியிடப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தள்ளி போய் கொண்டே உள்ளது. நரேஷ் குகுனூர் இயக்கி உள்ள இப்படத்தை தில் ராஜு இணைந்து தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஆந்திராவின் தொடர்ந்து லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு வருவதால், தியேட்டர்கள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை. இதனால் பல படங்கள் ஓடிடி தளத்தை நாடி வருவதால், குட் லக் சகி படமும் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என தகவல் பரவியதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











