»   »  ஷங்கர் படத்தில் அஜித்தும் இல்லை, கமலும் இல்லை... இவர்தான் ஹீரோவா?

ஷங்கர் படத்தில் அஜித்தும் இல்லை, கமலும் இல்லை... இவர்தான் ஹீரோவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'விவேகம்' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

தற்போது ரஜினியை வைத்து '2.O' படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தின் வேலைகள் முடிந்ததும் அஜித் நடிக்க உள்ள படத்தின் வேலைகளைத் தொடங்க இருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஷங்கர் முதல்வன் 2 எடுக்கவுள்ளார், அதற்காக அஜித்தைச் சந்தித்து கதை கூறியுள்ளார், ஏ.எம்.ரத்னம் அப்படத்தைத் தயாரிக்கவுள்ளார் என்று தான் செய்திகள் கிளம்பின.

 இப்போதைக்கு இல்லை :

இப்போதைக்கு இல்லை :

ஆனால், இதுகுறித்து விசாரிக்கையில் ‘அஜித் ஒரு சர்ஜரி முடிந்து தற்போது முழு ஓய்வில் இருக்கிறார், இயக்குநர் ஷங்கர் 2.O படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக உள்ளார், இவர்கள் தற்போதைக்குச் சந்திக்க வாய்ப்பே இல்லை' எனத் தெரிய வந்துள்ளது.

இந்தியன் -2 :

இந்தியன் -2 :

ஆகவே, '2.0' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கவிருப்பது அஜித் நடிக்கும் படத்தை அல்ல, கமல்ஹாசனை வைத்து 'இந்தியன்-2' படத்தைத்தான் இயக்கப் போகிறார் என்ற ஒரு தகவலும் வெளியானது.

 செகண்ட் பார்ட் ட்ரெண்ட் :

செகண்ட் பார்ட் ட்ரெண்ட் :

இயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் முதன் முதலாக இணைந்த 'இந்தியன்' படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாக ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது ட்ரெண்டாக உள்ளது. இந்நிலையில் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

 அரசியல் பிரவேசத்தால் பின்வாங்கும் ஷங்கர் :

அரசியல் பிரவேசத்தால் பின்வாங்கும் ஷங்கர் :

'கமலுடன் பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான், ஆனால் அவர் கட்சி ஆரம்பித்து முழு அரசியலில் ஈடுபடும் எண்ணத்தில் இருப்பதால் ஷங்கர் ஒதுங்கிவிட்டார். அதேபோல் அஜித்துடன் ஷங்கர் இணைந்து பணியாற்றப்போவதும் உண்மைதான். ஆனால் அது அடுத்த படம் இல்லை எனக் கூறுகின்றனர்.

 விக்ரம் படமா? :

விக்ரம் படமா? :

ஷங்கர் தனது அடுத்த படத்தில் விக்ரமை நடிக்க வைப்பார் என்றும் அது அநேகமாக 'அந்நியன் -2' படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 'அந்நியன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல வருடங்களாகவே பார்ட் 2 எடுக்கப்படுமா எனும் கேள்வி உலவி வருகிறது. இந்தப் படத்தின் மூலம் விக்ரம், முதல்முறையாக இரண்டாவது பாகப் படத்தில் நடிப்பாரா எனப் பார்க்கலாம்.

English summary
According to latest reports, Shankar and Vikram are planning to make an Anniyan -2 movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil