கன்ஃபார்ம் தான் போல.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அண்ணாச்சி அவுட்.. அவரே கொடுத்த சிக்னல்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் இந்த வாரம் தான் வீட்டுக்கு கிளம்ப போவதாக இமான் அண்ணாச்சியே தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
கமல்ஹாசன் சிபாரிசால் தான் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் இந்த நிகழ்ச்சிக்குள் வந்தார் என்றும் அதன் காரணமாகவே அவர் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறார் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வாரமும் அபிநய் வெளியேற மாட்டார் என்றும் இமான் அண்ணாச்சி தான் வெளியேற உள்ளார் என்றும் ஏற்கனவே கணிப்புகள் ஆரம்பித்து விட்டன.

எதிர்பாராததை எதிர்பாருங்க
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல்ஹாசன் அடிக்கடி சொல்லி வரும் நிலையில், எவிக்ஷனில் ஏகப்பட்ட தில்லு முல்லு வேலைகள் நடைபெற்று வருவதாக இந்த சீசனிலும் நெட்டிசன்கள் நிகழ்ச்சி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் அடுக்கி வருகின்றனர்.

சுருதி எலிமினேஷன்
அபிஷேக் ராஜாவை வெளியேற்றியதே ஒரு திட்டமிட்ட சதிதான் என நெட்டிசன்கள் திட்டி வந்த நிலையில், கடந்த வாரம் சுருதியையும் வெளியேற்றி ரசிகர்களின் ஒட்டுமொத்த கடுப்பையும் சம்பாதித்துள்ளது விஜய் டிவி. மக்களின் வாக்குகளின் அடிப்படையிலேயே அவர் வெளியேற்றப்பட்டதாக இருந்தாலும், அவர் வைத்திருந்த காயின் என்ன ஆச்சு? என்கிற கேள்வியையும் கேட்டு வருகின்றனர்.

அபிநயை அனுப்பமாட்டாங்க
கடந்த சில வாரங்களாக ரெட் ஜோனிலேயே இருந்து வரும் அபிநய் இந்த வாரமும் வெளியேற மாட்டார் என்கிற தகவல் கிடைத்துள்ளது. கருத்துக் கணிப்பில் இந்த வாரம் அபிநய்க்கு இமான் அண்ணாச்சி, அக்ஷரா உள்ளிட்ட போட்டியாளர்களை விட அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அண்ணாச்சி அவுட்
மேலும், இமான் அண்ணாச்சி தான் இந்த வாரம் கன்ஃபார்மாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்றும் அவர் வெறும் 40 நாட்கள் கால்ஷீட் உடன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாகவும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அவரே சொல்லிட்டாரு
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இமான் அண்ணாச்சியே நேற்றைய எபிசோடில் இந்த வாரம் நான் தான் வெளியே போகிறேன் பை பை என சொல்லும் காட்சிகளை பிக் பாஸ் எடிட்டர் கட் பண்ணாமல் போட்டு கன்ஃபார்ம் செய்துள்ளனர். கடந்த வாரம் சுருதி எவிக்ஷன் பற்றி பேசியதை போட்டு காட்டிய நிலையில், அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











