அபிநயிடம் காயினை கொடுத்தாரா இசைவாணி? இல்லை சுருதியை போலவே நெருப்பு காயினுடன் வெளியேறினாரா?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இசைவாணி வெளியேற்றப்பட்டுள்ள தகவல் கசிந்து விட்டது.
நெருப்பு ஆற்றல் காயினை கொண்டு இருந்தும் இந்த வாரம் இசை அதை பயன்படுத்தாமல் இருந்தது ஏன் என்கிற கேள்வியை கமல் சாரே கேட்டு விட்டார்.
அதன் பிறகு அபிநயிடம் காயின் பற்றி பேசும் இசைவாணி பேசிய நிலையில், அந்த காயினை அபிநய்க்கு அவர் கொடுத்தாரா? என்கிற சந்தேகம் கிளம்பி இருக்கிறது.

காயினுடன் வெளியேறிய சுருதி
காற்று காயினை தாமரையிடம் இருந்து திருடிய சுருதி அந்த காயினை பயன்படுத்த முடியாமலே பிக் பாஸ் வீட்டில் இருந்து காயின் உடன் வெளியேறினார். அந்த காயின் அவருக்கு கடைசி நேரத்தில் எந்தவொரு பலனையும் தரவில்லை. அந்த காயினை திருடியது தான் அவரை வெளியே அனுப்ப வைத்தது என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இசைவாணியிடமும் இருக்கு
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள இசைவாணியிடமும் நெருப்பு காயின் உள்ள நிலையில், அந்த காயினை நாமினேஷனின் போது அவர் பயன்படுத்தவில்லை. தலைவராக மாறி ஒரு வாரம் வெளியேறுவதில் இருந்து தப்பித்த இசைவாணி இந்த வாரம் தகராறு பண்ணும் போக்கிற்கு மாறியும் அதனை பயன்படுத்தவில்லை.

கமல் கேள்வி
நிரூப், பாவனி மற்றும் இசைவாணியிடம் மூவருமே ஏன் உங்களுக்கு கொடுத்த காயினின் பவரை பயன்படுத்தவில்லை என கமல் கேட்க, நிரூப் நான் நல்லா விளையாடுறேன், மக்கள் மீது நம்பிக்கை இருக்கு எனக் கூறினார். இசைவாணி மக்கள் மீது நம்பிக்கை இருக்கு எனக்கு இன்னமும் காயினை எப்படி பயன்படுத்துவது என புரியவில்லை என பம்மினார். பாவனி கடைசி 2 வாரம் யூஸ் பண்ணி டைட்டிலை வின் பண்ண போறேன் என கெத்துக் காட்டினார்.

அபிநய் இருப்பார்
மற்றும் அபிநய் என்றே நாமினேஷனில் தனக்கு பட்டப் பெயர் வைத்து விட்டார்கள் என அப்செட்டாக கமல் முன்பாகவே அழுது புலம்பிய அபிநய்க்கு நான் இருக்கேன் கண்ணா நீ ஏன் கவலைப்படுற கடைசி வரை இருப்பாய் என்று நேரடியாகவே சொல்லி விட்டார்.

அபிநய்க்கு கொடுப்பாரா
கமல் பேசி முடித்து வெளியே அபிநய் உடன் பேசிய இசைவாணி தான் ஏன் அந்த காயினை இந்த வாரம் பயன்படுத்தவில்லை என்று விளக்கம் அளித்தார். மேலும், இனி தனக்கு இந்த காயின் தேவையில்லை என்பது போல இசைவாணி பேசிய நிலையில், அந்த காயினை அபிநயிடம் அவர் கொடுப்பாரா? இல்லை காயினுடன் வெளியேறினாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











