Don't Miss!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
என்ன சொல்றீங்க...தலைவர் 169 ல் மூன்று ஹீரோயின்களா?...அட செம மேட்டரா இருக்கே
சென்னை : ரஜினியின் தலைவர் 169 படம் பற்றிய அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. படத்தை எப்போது ஆரம்பிக்க போகிறார்கள் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.
ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க போவதாக பிப்ரவரி மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
ரொம்ப மனிதநேயம் மிக்கவர் அஜித்.. 8 மணிநேரம் நின்னுட்டே பேசினார்.. பூரிப்பில் எம். எஸ். பாஸ்கர்!

பிரச்சனையை தீர்த்த ரஜினி
ஏப்ரல் 14 ம் தேதி தலைவர் 169 படத்தின் பூஜை நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், பீஸ்ட் பட ரிலீசிற்கு பிறகு தலைவர் 169 படத்தையே கைவிட போகிறார்கள் என்னும் அளவிற்கு வதந்திகள் பரவ துவங்கி விட்டன. ஒரு வழியாக கவர் போட்டோவை மாற்றி, இந்த பிரச்சனையை முடித்து வைத்துள்ளார் ரஜினி. நெல்சனும் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 ஹேஷ்டேக்கை டேக் செய்து படத்தை உறுதிப்படுத்தி உள்ளார்.

தலைவர் 169 ல் ரம்யா கிருஷ்ணன்
ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மனோஜ் பரமஹம்சா தான் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதில் ரஜினிக்கு ஜோடியாக தான் ரம்யா கிருஷ்ணன் நடிக்க போகிறார் என கூறப்பட்டது.

என்னது 3 ஹீரோயின்களா
ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி, தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் 3 ஹீரோயின்கள் நடிக்க போகிறார்களாம். மூன்று பேருக்கும் மிக முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதாவது படையப்பா படத்தை போலவே இந்த படத்திலும் ரம்யா கிருஷ்ணன் வில்லி ரோல் தான் பண்ண போகிறாராம். ஏற்கனவே சொல்லப்பட்டதை போல் ஐஸ்வர்யா ராய், ரஜினிக்கு ஜோடியாக நடிக்க போகிறாராம். பிரியங்கா அருள்மோகன், ரஜினியின் மகள் ரோல் அல்லது மிக முக்கியமான மற்றொரு ரோலில் நடிப்பார் என கூறப்படுகிறது.

புது கதை தயாராகிறதா
யோகிபாபுவும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். பீஸ்ட் படம் பார்த்து விட்டு, தலைவர் 169 படத்தின் கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என ரஜினி சொன்னதால், புதிய கதையை உருவாக்கும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். கதை விரிவாக்கத்திற்காக வாரத்திற்கு இருமுறை ரஜினியை சந்தித்து கதை தொடர்பாக டிஸ்கஸ் செய்து வருகிறாராம் நெல்சன்.