பிக்பாஸ் அல்டிமேட்...இந்த வாரம் டபுள் எவிக்ஷனா? வெளியேற போகும் அந்த இன்னொருவர் யார்?

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்குமாம். அப்படி இருந்தால் வெளியேற போகிற அந்த இரண்டு போட்டியாளர்கள் யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்த வாரம் வெளியேற போகிற ஒருவர் யார் என்பது ஏற்கனவே ஏறக்குறைய முடிவாகி விட்ட நிலையில் அந்த இன்னொருவர் யார் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி 30 ம் தேதி 14 போட்டியாளர்களுடன் 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஷுட்டிங் காரணமாக கமல் விலகியதால், கடந்த வாரம் முதல் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, வனிதா விஜயக்குமார், ஷாரிக், அபினய் வெளியேறி உள்ள நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் கலக்க போவது யாரு சதீஷ் ஆகியோர் கடந்த வாரம் உள்ளே வந்தனர்.

நாமினேஷனில் 7 பேர்

நாமினேஷனில் 7 பேர்

பிக்பாஸ் அல்டிமேட்டில் புதிய ஹோஸ்டாக சிம்பு அறிமுகமாகும் நாள் என்பதால் கடந்த வாரம் நோ எவிக்ஷன் என அறிவித்தார் சிம்பு. அதே சமயம் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் உண்டு என்பதை அவர் கடந்த வாரமே சொல்லி விட்டார். இதற்கிடையில் இந்த வாரம் நடந்த நாமினேஷனில் அபிராமி, அனிதா, தாடி பாலாஜி, ஜுலி, சினேகன், சுருதி மற்றும் தாமரை ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட்டில் முதல் முறையாக பெண் போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

 யாருக்கு எவ்வளவு ஓட்டு

யாருக்கு எவ்வளவு ஓட்டு

ஐந்து வாரங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை நடத்தப்பட்ட ஆன்லைன் ஓட்டுப்பதிவில் 27 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களுடன் தாமரை முதலிடத்தில் உள்ளார். நாமினேட் ஆன 7 பேரில் தாடி பாலாஜி தான் மிக குறைவான 6.46 சதவீதம் ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் உள்ளார். அதனால் அவர் தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என்பது ஏற்கனவே வெளியாகி விட்டது. இதை உறுதி செய்யும் வகையில் உடல்நிலை காரணமாக தன்னால் ஆக்டிவாக இருக்க முடியவில்லை என அவரே சிம்புவிடம் ஓப்பனாக கூறினார். அதோடு, அவர் பிசிக்கல் டாஸ்குகளில் பங்கேற்பதில்லை என்ற குற்றச்சாட்டை பலரும் முன்வைத்து வருகின்றனர். இதில் சாப்பிடாமல் வேறு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் தாடி பாலாஜி.

அந்த இன்னொருவர் யார்

அந்த இன்னொருவர் யார்

ஓட்டு சதவீத அடிப்படையில் பார்த்தால் தாடி பாலாஜியை தொடர்ந்து சினேகன், சுருதி இருக்கிறார்கள். சுருதியை விட சினேகன் குறைவான ஓட்டுக்களை பெற்றிருந்தாலும் சுருதிக்கு எதிராக தான் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு பார்வையாளரை போல் தான் சுருதி பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். சினேகனும் உடல்நிலையை காரணம் காட்டி பல டாஸ்க்குகளில் சுவாரஸ்யம் காட்டுவதில்லை என்பதும் பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

 டபுள் எவிக்ஷன் உண்மை தானா

டபுள் எவிக்ஷன் உண்மை தானா

தாடி பாலாஜி வெளியேறுவது கிட்டதட்ட முடிவாகி விட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக சுருதி அல்லது சினேகன் வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் டபுள் எவிக்ஷன் இருப்பது உண்மை தானா அல்லது சிங்கிள் எவிக்ஷனா என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X