பார்த்திபன் மைக்கை வீசி எறிந்தது செட்டப்பா... அப்போ எல்லாமே இதுக்கு தானா?

சென்னை : பட விழாவில் நடிகர் பார்த்திபன் மைக்கை வீசி எறிந்த சம்பவம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக கோலிவுட்டிலும், சோஷியல் மீடியாவிலும் பேசப்பட்டு வருகிறது. பார்த்திபன் எதற்காக இப்படி செய்தார் என்பது தான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.

Recommended Video

கடும் கோபத்தில் #Mic-ஐ தூக்கியெறிந்த #Parthiban! | #IravinNizhal first single launch | Filmibeat Tamil

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது புதிய முயற்சியாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் சினிமா இது தான் என சொல்லப்படுகிறது.

சுவாரஸ்யமான பேச்சு

சுவாரஸ்யமான பேச்சு

இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக பல லட்சங்கள் செலவழித்து சென்னையில் முக்கிய அரங்கம் ஒன்றில் இரவின் நிழல் ப்ரொமோஷன் நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். படம் பற்றியும், படத்தின் கதை, படத்தின் பாடல்கள் என பல விஷயங்கள் பற்றி சுவாரஸ்யமாக இருவரும் மேடையில் பேசிக் கொண்டிருந்தனர்.

மைக்கை வீசி எறிந்த பார்த்திபன்

மைக்கை வீசி எறிந்த பார்த்திபன்

நன்றாக சிரித்து பேசிக் கொண்டிருந்த பார்த்திபன், திடீரென கோபப்பட்டு கையில் இருந்த மைக்கை கீழே வீசி எறிந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. மைக் வேலை செய்யாமல் போனதால் தான் பார்த்திபன் கோபப்பட்டதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டது. அதே மேடையிலேயே பார்த்திபன் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டார்.

ரஹ்மானின் ரியாக்ஷன் இது தானா

ரஹ்மானின் ரியாக்ஷன் இது தானா

ஆனால் அது இப்போது மேட்டர் கிடையாது. பார்த்திபன் கோபமாக மைக்கை வீசி எறிந்த போது, மேடையில் அமர்ந்திருந்த ரஹ்மான் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. எந்த பதற்றமும் இல்லாமல், என்ன நடக்கிறது...எதற்காக பார்த்திபன் கோபப்படுகிறார் என்ற குழப்பம் கொஞ்சும் கூட இல்லாமல், கூலாக அமர்ந்திருந்தார். அவரின் முகத்தில் வழக்கமான புன்னகை மட்டுமே இருந்தது. அதுவும் மிக இயல்பாக இருந்தது.

அப்போ எல்லாமே செட்டப்பா

அப்போ எல்லாமே செட்டப்பா

இதை வைத்து பார்க்கும் போது இது எல்லாமே படத்தின் ப்ரொமோஷனுக்காக பார்த்திபன் செய்த செட்டப்பா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். நன்றாக பேசிக் கொண்டிருக்கும் ஒருவர் திடீரென இப்படி நடந்து கொண்டால் அனைவருக்கும் பதற்றம், குழப்பம் தான் ஏற்படும். ஆனால் ரஹ்மானின் ரியாக்ஷனை பார்க்கும் போது இது எல்லாமே ஏற்கனவே அவருக்கு தெரிந்து தான் நடத்தப்பட்டுள்ளதாக தோன்றுகிறது என சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.

 நெட்டிசன்களின் டவுட்

நெட்டிசன்களின் டவுட்

அது மட்டுமில்லாமல், ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி பார்த்திபனே அவ்வளவு உயர்வாக பேசி உள்ளார். அப்படி இருக்கையில் மேடையில் ரஹ்மான் இருக்கும்போது பார்த்திபன் எப்படி அப்படி நடந்து கொள்வார். மைக் வேலை செய்யாமல் போவது எல்லாம் ஒரு சாதாரண விஷயம். இது பல நிகழ்ச்சிகளில் வழக்கமாக நடக்கக் கூடியது தான். இது போல் எத்தveனை மேடைகளை பார்த்திபன் பார்த்திப்பார், பேசி இருப்பார். அப்போதெல்லாம் ஒரு முறை கூடவா இப்படி நடக்காமல் இருந்திருக்கும். இதற்கு முன் பார்த்திபன் இப்படி நடந்து கொண்டதாக எந்த தகவலும் இல்லையே. அப்படி இருக்கையில் இப்போது மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என பல சந்தேகங்களையும், கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

பரபரப்பு மேல் பரபரப்பு

பரபரப்பு மேல் பரபரப்பு

பெரும்பாலானவர்கள் படத்திற்கு விளம்பரம் தேடுவதற்காக பார்த்திபன் செய்த செட்டப் இது என தெரிவித்துள்ளனர். நெட்டிசன்களின் இந்த சந்தேகங்கள் இன்னும் கூடுதல் பரபரப்பை கோலிவுட்டில் ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X