»   »  மங்காத்தா இந்தி ரீமேக்கில் யார் 'தல'?: சல்லுவா, அக்கியா?

மங்காத்தா இந்தி ரீமேக்கில் யார் 'தல'?: சல்லுவா, அக்கியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மங்காத்தா இந்தி ரீமேக்கில் அஜீத்தின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் அல்லது அக்ஷய் குமார் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த ஹிட் படமான மங்காத்தா இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. மங்காத்தாவின் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ கிரீன் பெற்றுள்ளது. பாலிவுட்டில் தென்னிந்திய படங்களை ரீமேக் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Is It Salman Khan Or Akshay Kumar In Ajith Kumar's Role In Mankatha?

ரீமேக் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருபவர்கள் சல்மான் கானும், அக்ஷய் குமாரும். இந்நிலையில் அவர்களில் யாராவது ஒருவரை மங்காத்தா இந்தி ரீமேக்கில் அஜீத் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ரந்தீப் ஹூடா அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மங்காத்தா இந்தி ரீமேக்கை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது. அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தி படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சல்மான் கான் போலீஸ் அதிகாரியாக நடித்த தபாங், தபாங் 2 படங்கள் வெற்றி பெற்றன என்பது நினைவிருக்கலாம்.

English summary
Director Venkat Prabhu's super duper hit film in South is coming to Bollywood as remake after four years of it's release. If sources are to be believed, besides Salman Khan, even Akshay Kumar is also considered for the remake version.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil