பாலாவிடம் கோபித்து கொண்டு போனாரா சூர்யா... உண்மையில் என்ன தான் நடந்தது ?

சென்னை : டைரக்டர் பாலா மீது கோபித்து கொண்டு, ஷுட்டிங்கில் இருந்து சூர்யா கிளம்பி போய் விட்டார் என்று கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி தற்போது படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

டைரக்டர் பாலா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா, கிருத்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

சூர்யா -பாலா கூட்டணி

சூர்யா -பாலா கூட்டணி

பிதாமகன் படத்திற்கு பிறகு பாலா - சூர்யா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சூர்யா 41 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யா, மீனவர் ரோலில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் வழக்கமான பாலா படங்களை போல் இல்லாமல் வேற லெவலில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆர்வத்தை தூண்டும் சூர்யா 41

ஆர்வத்தை தூண்டும் சூர்யா 41

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கன்னியாகுமரியில் சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் நடந்து வருகிறது. வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் சூர்யா கமிட்டாகி உள்ளதால், சூர்யா 41 படத்தை விரைந்து முடிக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும், படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள், சூர்யாவின் ரோல் என்ன, இதில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறாரா என்றெல்லாம் ரசிகர்கள் ஆவலாக பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

கோபத்தில் போனாரா சூர்யா

கோபத்தில் போனாரா சூர்யா

அதே சமயத்தில் சோஷியல் மீடியாவில் சூர்யா 41 படம் பற்றி பல வதந்திகள் கடந்த சில நாட்களாகவே பரவி வருகிறது. சூர்யா 41 படத்தில் படு பிஸியாக நடித்து வந்த சூர்யா, சமீபத்தில் திடீரென மும்பை புறப்பட்டு சென்றார். சூரரைப் போற்று இந்தி ரீமேக்கையும் 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட சென்றார். ஆனால் இதை, சூர்யா, பாலாவிடம் கோபித்துக் கொண்டு தான் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவசரமாக கிளம்பி சென்றார் என கிளப்பி விட்டனர்.

கோபத்தில் போனாரா சூர்யா

கோபத்தில் போனாரா சூர்யா

அதே சமயத்தில் சோஷியல் மீடியாவில் சூர்யா 41 படம் பற்றி பல வதந்திகள் கடந்த சில நாட்களாகவே பரவி வருகிறது. சூர்யா 41 படத்தில் படு பிஸியாக நடித்து வந்த சூர்யா, சமீபத்தில் திடீரென மும்பை புறப்பட்டு சென்றார். சூரரைப் போற்று இந்தி ரீமேக்கையும் 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட சென்றார். ஆனால் இதை, சூர்யா, பாலாவிடம் கோபித்துக் கொண்டு தான் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவசரமாக கிளம்பி சென்றார் என கிளப்பி விட்டனர்.

ஆஹா...இது வேற நடந்திருக்கா

ஆஹா...இது வேற நடந்திருக்கா

பிறகு சூரரைப் போற்று இந்தி ரீமேக் அறிவிப்பு வந்ததும் இந்த வதந்தி அடங்கி போனது. இந்நிலையில் சூர்யா, வாடிவாசல் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சிறுத்தை சிவாவிற்காக கொடுத்த தேதிகளை மாற்றி அயலான் பட டைரக்டர் ரவிக்குமாருக்கு கொடுத்துள்ளதாகவும், அவர் இயக்க போகும் சையின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் சூர்யா நடிக்க போவதாகவும் தகவல் வெளியானது.

எப்படியெல்லாம் கிளப்பி விடுறாங்க

எப்படியெல்லாம் கிளப்பி விடுறாங்க

ஆனால் இதை அப்படியே மாற்றி, டைரக்டர் பாலா மீதான கோபம் காரணமாக சூர்யா, சூர்யா 41 படத்தில் இருந்து அவரை மாற்றி விட்டார் என சோஷியல் மீடியாக்களில் வதந்தி பரவி வருகிறது. சூர்யா 41 படம் பற்றியும், டைரக்டர் பாலா - சூர்யா இடையேயான உறவு பற்றியும் தொடர்ந்து பரவும் இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க படக்குழு தரப்பில் இருந்தே தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

சூர்யாவை பற்றிய ரகசியத்தை சொன்ன சிவகுமார் | Oh My Dog | Arun Vijay
படக்குழு தந்த விளக்கம்

படக்குழு தந்த விளக்கம்

சூர்யா - பாலா இணைந்துள்ள சூர்யா 41 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் மிகுந்த புரிதலுணர்வுடன் நடைபெற்றது. திட்டமிட்ட தேதியில் முதல் கட்ட ஷுட்டிங் நிறைவடைந்தது. இந்த படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் ஜுன் மாதம் கோவாவில் துவங்க உள்ளது என படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X