பாவனியை சோதனையிட்ட அக்ஷரா...இதெல்லாம் கூட நடந்ததா ?
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 27 வது நாளான இன்று, கமல் வரும் வார இறுதி எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதில் இந்த வாரம் நடந்த பிரச்சனை பற்றி கமல் பேசுவாரா, அவர் யாருக்கு சப்போர்ட் செய்ய போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தாமரை உடைமாற்றும் அறைக்குள் சென்று பாவனியின் உதவியுடன், சுருதி காயினை எடுத்தது இந்த வாரம் மிகப் பெரிய பிரச்சனையாக வெடித்தது. ஆனால் பிக்பாஸ் ஏதும் சொல்லாததால் யார் பக்கம் நியாயம் உள்ளது என சொல்ல முடியாமல் மற்ற போட்டியாளர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

பிரியங்காவை கண்டித்த கமல்
கடந்த வாரமே பிரியங்கா, சின்ன பொண்ணுவை தனியே உடைமாற்றும் அறைக்கு அழைத்துச் சென்று காயின் உள்ளதா என சோதனை செய்யப்பட்டதை கமல் தவறு என கண்டித்தார். தான் செய்தது தவறு தான் என பிரியங்காவும் ஒப்புக் கொண்டு, கமலிடம் மன்னிப்புக் கேட்டார்.

ஷாக் கொடுத்த வீடியோ
இந்நிலையில் தாமரை விவகாரம் தான் பெரிதாக பேசப்படும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், சுருதி, பாவனி மற்றும் மதுமிதா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சோதனையிட்டது தவறில்லை
அந்த வீடியோவில் சுருதி, சோதனையிட்டது எனக்கு தவறாக தெரியவில்லை. எல்லோரும் எல்லோரையும் தான் செய்தார்கள். ஒருவேளை அவருடைய வயது காரணமாக இது பெரிதாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அளவிற்கு இவர்கள் சீன் கிரியேட் பண்ணி இருக்க வேண்டாம் என்கிறார்.

என்னையும் சோதனையிட்டாள்
அப்போது குறுக்கிடும் பாவனி, அக்ஷரா என்னை வெளியில் வைத்தே சோதனை செய்தாள். அவள் செய்த பிறகு நானும் சோதனை போட்டேன். அப்போது எனக்கு இது போல் தோன்றவேயில்லை என்கிறார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

இதெல்லாம் தெரியாதா
இந்த வீடியோவை பார்த்து விட்டு, நெட்டிசன்கள் பலர், கமல் சார்...இந்த வாரம் உங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்தவங்க இதை பார்க்கவில்லை போல . இனியாவது எல்லா வீடியோவையும் பார்த்து விட்டு ஸ்கிரிப்ட் எழுத சொல்லுங்க என கிண்டல் செய்துள்ளனர். பிக்பாஸ் ஷோ நடத்துறவங்களுக்கு இதெல்லாம் கண்ணுல படாதா. ஒன் சைட் ஷோ. இதெல்லாம் எப்போ நடந்தது என பலர் கேட்டுள்ளனர்.

ப்ரோமோல கூட வரலியே
இது போல் ப்ரோமோவிலும் வராமல், எபிசோடிலும் வராமல் இன்னும் எத்தனை வீடியோக்கள் உள்ளனவோ. இது போன்ற சீன்களை சேர்க்காமல் ஏன் ஒன்றுமே புரியாத குழப்பமான சீன்களையே எபிசோட்களில் காட்டுகிறார்கள் என நெட்டிசன்கள் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











