என்னது... அரபிக்குத்து பாட்டு பீஸ்ட் படத்தில் கிடையாதா...அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
சென்னை : ப்ரோமோவில் சொன்னபடி பான் வேர்ல்ட் பாட்டாக அரபிக்குத்து பாடலை போட்டார் அனிருத். ஆனால் அனைவரையும் கவர்ந்த இந்த பாட்டு பீஸ்ட் படத்திலேயே கிடையாதாம். இந்த தகவல் விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரிலீசக்கு தயாராகும் பீஸ்ட்
பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். மெகா பட்ஜெட் படமாக உருவாக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் வேலைகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாம். விரைவில் படத்தின் வேலைகள் முடிக்கப்பட்டு, ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம்.

மாஸான அரபிக்குத்து
படத்தின் வேலைகள் முடிவடையும் முன்பே ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடலை வெளியிட்டு ப்ரோமோஷன் வேலைகளை துவக்கி விட்டார்கள். சிவகார்த்திகேயன் வரிகளில், அனிருத் இசையமைத்து, ஜோனிடா காந்தியுடன் இணைந்து பாடிய இந்த பாடல் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. இதற்கு முன்பே அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார் இணைந்து அரபிக்குத்து ப்ரோமோ வீடியோவை வெளியிட்டனர்.

பான் வேல்ட் பாடல் தான்
ஹலமதி ஹபிபோ பாடல் பான் வேல்ட் பாடலாக இருக்கும் என அனிருத் ப்ரோமோவிலேயே கூறி இருந்தார். அவர் சொன்னபடியே அரபிக்குத்து பான் வேல்ட் பாடலாக அனைவரையும் கவர்ந்து 63 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சோஷியல் மீடியாவில் பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி, வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலக அளவில் குறுகிய காலத்தில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட சர்வதேச பாடல்கள் பட்டியலில் அரபிக்குத்து பாடலும் இடம்பெற்றுள்ளது.

என்ன படத்தில் அரபிக்குத்து இல்லையா
லேட்டஸ்ட் தகவலாக பீஸ்ட் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக அரபிக்குத்து பாடல் படத்தில் இடம்பெறவில்லையாம். படத்தின் இடையே எந்த இடத்திலும் அரபிக்குத்து பாடலை சேர்க்க முடியவில்லையாம். இருந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த பாடலை நீக்க முடியாமல், ரசிகர்களின் கோரிக்கையின்படி படத்தின் இறுதியில் சேர்த்துள்ளார்களாம். ஏற்கனவே டாக்டர் படத்திலும் செல்லம்மா பாடலை கடைசியில் தான் சேர்த்திருந்தனர்.

அப்போ எதுக்கு அரபிக்குத்து போட்டாங்க
வேல்டு ஃபேமஸ் ஆகி விட்டதால் படத்தின் இடையில் இந்த பாடலை சேர்ப்பதற்கு பதில், ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காக இறுதியில் வைப்பது தான் சரியாக இருக்கும் என பலர் கூறி வருகிறார்களாம். பாடலை இடையில் இணைக்கும் அளவிற்கு திரைக்கதையில் இடம் இல்லாததால் கடைசியிலாவது அரபிக்குத்து பாடலை வைத்து விடுவோம் என படக்குழுவும் முடிவு செய்துள்ளதாம். ஆனால் இந்த தகவல் உண்மை தானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











