என்னது பீஸ்ட் ரிலீஸ் தேதியும் முடிவாகிடுச்சா?...இது தானா?...மிரள வைக்கும் ரசிகர்கள்

சென்னை : அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல்களும் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய்யின் பிறந்தநாளன்று படத்தின் டைட்டிலுடன் ஃபஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிட்டதோடு சரி, அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசிற்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் விஷயத்தில் சன் பிக்சர்ஸ் மெளனம்

பீஸ்ட் விஷயத்தில் சன் பிக்சர்ஸ் மெளனம்

பீஸ்ட் படத்தை பொங்கலுக்கே ரிலீஸ் செய்ய தான் முதலில் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் ஆர்ஆர்ஆர், வலிமை போன்ற படங்கள் பொங்கல் ரிலீசை அறிவித்ததால், அந்த சமயத்தில் பீஸ்ட் படத்தை வெளியிட்டால் அனைத்து படங்களின் வசூலும் பாதிக்கப்படும் என்பதால் ரிலீசை அறிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனமோ சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை பற்றிய அப்டேட்களை தான் வெளியிட்டு வருகிறது. தனது ட்விட்டர் பக்கத்திலும் கவர் போட்டோவாக எதற்கும் துணிந்தவன் போஸ்டரை தான் வைத்துள்ளது.

ஃபஸ்ட் சிங்கிள் கூட வரலியே

ஃபஸ்ட் சிங்கிள் கூட வரலியே

பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் தீபாவளி, புத்தாண்டு, பொங்கலுக்கு வரும் என அடுத்தடுத்து கூறினார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பீஸ்ட் படத்தின் ரிலீசும் எப்போதென்று தெரியாமல் இருந்ததால் ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறி வந்தனர்.

டென்ஷனான விஜய் ரசிகர்கள்

டென்ஷனான விஜய் ரசிகர்கள்

இதற்கிடையில் பிப்ரவரி 4ம் தேதி எதற்கும் துணிந்தவன் ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், பிறகு அதை தள்ளிவைத்து, தற்போது மார்ச் 10ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கன்ஃபார்ம் செய்துள்ளனர். சூர்யா, சிவகார்த்திகேயன், அஜித் படங்களின் ரிலீஸ் தேதிகள் அடுத்தடுத்து கன்ஃபார்ம் செய்யப்படுவதால் விஜய் ரசிகர்கள் டென்ஷனாகி விட்டனர். இதனால் #BeastUpdate என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

இதுதான் பீஸ்ட் ரிலீஸ் தேதியா

இதுதான் பீஸ்ட் ரிலீஸ் தேதியா

லேட்டஸ்ட் தகவலின் படி பீஸ்ட் படம் ஏப்ரல் 14 இல்லையாம். அதற்கு பதிலாக ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது பீஸ்ட் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளிவர உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த உற்சாகத்தில் தான் விஜய் ரசிகர்கள் #BeastUpdate என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப்பில் உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X