செம தில்லு தான்...பொன்னியின் செல்வனுடன் மோத தயாராகும் தனுஷ் படம்
சென்னை : அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கி உள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
Recommended Video
சமீபத்தில் வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசரில் வரும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து அனைவரும் பிரம்மித்து போய் உள்ளனர்.
பொன்னியின் செல்வன் நாவலை படித்து விட்டு இதையெல்லாம் எப்படி படமாக்க முடியும் என கேட்டவர்கள், தற்போது அந்த காட்சிகளை திரையில் பார்க்க ஆர்வமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இதனால் ரசிகர்களுக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 30ல் பொன்னியின் செல்வன்
இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. விரைவில் படத்தின் டிரைலர் ரிலீஸ், ஆடியோ ரிலீஸ் போன்றவைகளும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னது தனுஷ் படமும் அதே நாளிலா
இந்நிலையில் பொன்னியின் செல்வன் ரிலீசாகும் அதே நாளில் தனுஷின் நானே வருவேன் படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒன்று ஹீரோ ரோல், மற்றொன்று வில்லன் ரோல்.

தனுஷ் ரோல் இது தானா
தனுஷ், கொக்கி குமார் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் செல்வராகவனும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இவர்களுடன் இந்துஜா ரவிச்சந்திரன், யோகிபாபு, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் பேனரில் தான் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மும்முரமான போஸ்ட் ப்ரொடக்ஷன்
நானே வருவேன் படத்தின் ஷுட்டிங் ஏற்கனவே முடிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் துவங்கி போஸ்டர் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. டப்பிங் வேலைகளும் முடிக்கப்பட்டு விட்ட நிலையில் செப்டம்பர் 30 படம் ரிலீஸ் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்புர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

கவலையில் தனுஷ் ரசிகர்கள்
வரிசையாக ஜகமே தந்திரம், மாறன் என தனுஷ் படங்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் அவருக்கு மீண்டும் கம்பேக் படங்களாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் போன்ற பெரிய படத்துடன் நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்தால், அது நிச்சயம் படத்தின் வசூலை பாதிக்கும் என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











