என்னது...நயன்தாரா படத்தில் ஹீரோவாகிறாரா கவின் ?

சென்னை : விஜய் டிவி சீரியல்கள் மூலம் நடிகரான கவின், பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின், தொடர்ந்து டைரக்டர் நெல்சன் திலீப்குமாரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்ந்தார்.

மாஸ்டர், டாக்டர் படங்களைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் விஜய்யை வைத்து இயக்கி வரும் பீஸ்ட் படத்திலும் அசிஸ்டென்ட்டாக பணியாற்றி வருகிறார் கவின். அதோடு வினித் வரபிரசாத் இயக்கிய லிஃப்ட் படத்திலும் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.

கவின் அசத்தல் நடனம்

கவின் அசத்தல் நடனம்

நேற்று நடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5 துவக்க விழாவில் லிஃப்ட் படத்தில் வரும் என்ன மயிலு பாடலுக்கு கவின் அசத்தலாக பெர்ஃபார்ம் செய்தார். கவினா இது...இப்படி ஆடி அசத்துறாரே என பலரும் கவினின் நடனத்தை பாராட்டி உள்ளனர்.

வரவேற்பை பெற்ற லிஃப்ட்

வரவேற்பை பெற்ற லிஃப்ட்

கவின் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள லிஃப்ட் படம் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது. இந்த படம் நல்ல விமர்சனங்களை மட்டுமல்ல, அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும் பெற்றள்ளது, கவின் நடிப்பு, டான்ஸ் என அனைத்தும் வேற லெவலில் பாராட்டப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் பாடிய பாடல்

சிவகார்த்திகேயன் பாடிய பாடல்

Ekka Entertainment தயாரித்த லிஃப்ட் படத்தில், பிகில் படத்தில் நடித்த அமிர்தா அய்யர் ஹீரோயினாக நடித்துள்ளார். முற்றிலும் பேய் படமாக இருந்தாலும், அதில் சோஷியல் மெசேஜையும் சேர்த்து சொல்லி உள்ளார் டைரக்டர். இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய என்னா மயிலு பாடல் செம ஹிட்டாகி உள்ளது. இதனால் கவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நயன்தாரா படத்தில் கவின்

நயன்தாரா படத்தில் கவின்

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து, ரெளடி பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்க போகிறார்களாம். ஆனால் இந்த படத்தின் நயன்தாரா நடிக்க போவதில்லையாம். ஹீரோயினாக வாணி போஜன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டைரக்டர் உள்ளிட்ட மற்ற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

இதே பேச்சு தான்

இதே பேச்சு தான்

இரண்டாவது படமே நயன்தாரா தயாரிப்பில் நடிப்பதால், கோலிவுட் முழுவதும் கவின் அடுத்து நடிக்க போகும் படம் பற்றிய பேச்சாகத்தான் உள்ளது. இந்த படத்தை விக்னேஷ் சிவனே இயக்குவாரா, இந்த படத்தில் நயன்தாரா கெஸ்ட் ரோலிலாவது நடிப்பாரா என்பன போன்ற பல கேள்விகள் கோலிவுட்டில் பரவி வருகிறது.

இவர் படத்திலும் கவினா

இவர் படத்திலும் கவினா

நெல்சன் திலீப்குமார் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமான கவின், விரைவில் நெல்சன் திலீப்குமார் இயக்க போகும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க போவதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X