ஏகே 61 படத்தில் கேஜிஎஃப் 2 வில்லனா?...சம்பவம்னா இப்படி இருக்கனும்
சென்னை : டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அடுத்து என்ன அப்டேட் தந்து இன்ப அதிர்ச்சி கொடுக்க போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த படததின் 60 சதவீதம் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டது. இறுதிக்கட்ட ஷுட்டிங் விரைவில் புனேயில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக புதிய கெட்அப்பில் அஜித் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
முதல் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில் முடித்து விட்டனர். ஐரோப்பா டூர் முடித்து அஜித் வந்து விட்டதால் விரைவில் இறுதிக் கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக சொல்கிார்கள்.

லீக்கான ஏகே 61 வங்கி செட் வீடியோ
இந்த சமயத்தில் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஏகே 61 படத்திற்காக போடப்பட்ட சென்னை மவுண்ட் ரோடு வங்கியின் செட் பற்றிய வீடியோ வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது. Your Bank என்ற பெயரில் காட்டப்படும் இந்த வங்கி, சென்னை மவுண்ட் ரோடு எஸ்பிஐ வங்கி கட்டிடம் போலவே அமைக்கப்பட்டுள்ளது.

என்னது ஏகே 61 தீபாவளி ரிலீசா
இதற்கிடையில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாத மத்தியில் முடிக்கப்பட்டு விடும். அதற்கு பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட்டு, இந்த ஆண்டு தீபாவளிக்கே ஏகே 61 படம் ரிலீஸ் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.ஆகஸ்ட் மாதத்தில் ஏகே 61 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படலாம் எனறும் சொல்லப்படுகிறது.

ஏகே 61 படத்தில் கேஜிஎஃப் 2 வில்லன்
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக கேஜிஎஃப் 2 படத்தின் வில்லன் சஞ்சய் தத், ஏகே 61 படத்தில் இணைந்துள்ளதாகவும், மிக முக்கியமான ரோலில் இவர் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கேஜிஎஃப் 2 படத்தில் வில்லன் ஆதீரா ரோலில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சஞ்சய் தத். ஆனால் ஏகே 61 படத்தில் சஞ்சய் தத், அஜித்திற்கு வில்லனாக நடிக்கிறாரா அல்லது பாசிடிவ் ரோலில் நடிக்கிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

எப்போ அப்டேட் வரும்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் மீண்டும் துவங்கப்பட உள்ளதாகவும், அதற்கு பிறகு படத்தில் நடிப்பவர்கள் பற்றிய தகவல் வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது. இது னரை வெளியான தகவலின்படி, ஏகே 61 படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, அஜய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர் உள்ளிட்டோர் ஏகே 61 படத்தில் நடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











