கேஜிஎஃப் டைரக்டர் விஜய் ஃபேனா...ஆதாரங்களை தோண்டும் ரசிகர்கள்

சென்னை : பிளாக் பஸ்டர் படமான கேஜிஎஃப் படத்தை இயக்கிய டைரக்டர் பிரஷாந்த் நீல், விஜய்யின் தீவிர ரசிகராம். இதை நிரூபிக்க அவரை பற்றிய விஷயங்களை தேடி தேடி தோண்டி எடுத்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்த நாளே யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 படம் ரிலீசாக உள்ளது. இதனால் எந்த படம் வெற்றி பெறும் என கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் பெரிய விவாதமாக போய் கொண்டிருந்தது. இது பற்றி, கேஜிஎஃப் 2 டிரைலர் வெளியீட்டு விழாவில் யாஷிடமே கேட்கப்பட்டது.

யாஷ் சொன்ன நச்சு பதில்

யாஷ் சொன்ன நச்சு பதில்

அதற்கு யாஷ் ஸ்மார்ட்டாக, பீஸ்ட் Vs கேஜிஎஃப் 2 என சொல்வதே தவறு. பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 என்று தான் சொல்ல வேண்டும். இது சினிமா. தேர்தல் கிடையாது. நானும் பீஸ்ட் படம் பார்ப்பேன் என பதிலளித்தார். யாஷின் இந்த பதில் சோஷியல் மீடியாவில் செம டிரெண்ட் ஆனது. அவரின் பதிலுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

நானே விஜய் ஃபேன் தான்

நானே விஜய் ஃபேன் தான்

இந்நிலையில் கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் தான், கேஜிஎஃப் 2 படத்தையும் இயக்கி உள்ளார். இந்நிலையில் பீஸ்ட் பட டைரக்டர் நெல்சன் திலீப்குமார் கேஜிஎஃப் 2 டிரைலரை பாராட்டி இருந்தார். இதற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்த பிரஷாந்த் நீல், விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்க ஆர்வமாக காத்திருப்பதாகவும், விஜய் படங்கள் அனைத்தையும் தான் பார்த்து விடுவதாகவும் கூறி இருந்தார். அதுமட்டுமல்ல தான் விஜய்யின் ஃபேன் என்று கூறி இருந்தார்.

ஆதாரத்தை தேடிய ரசிகர்கள்

ஆதாரத்தை தேடிய ரசிகர்கள்

இதை பார்த்த விஜய் ரசிகர்கள், பிரஷாந்த் நீல், விஜய் பற்றி போட்ட பழைய ட்வீட்களை தேட துவங்கி விட்டனர். இவர் தியேட்டரில் விஜய் படம் எதையாவது பார்த்துள்ளாரா, இல்லையா என தேடினர். ஒருவழியாக பிகில் , மாஸ்டர் படங்கள் பற்றி பிஷாந்த் போட்ட பழைய ட்வீட்களை கண்டுபிடித்து அதிகம் ஷேர் செய்ய துவங்கி விட்டனர்.

யாஷ் சொன்னது கரெக்ட் தான்

யாஷ் சொன்னது கரெக்ட் தான்

பிரஷாந்த் தற்போது சொன்னது உண்மை தான். கேஜிஎஃப் 2 டைரக்டரே தங்களை போல் பீஸ்ட் படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக சொல்லி கொண்டாடி வருகின்றனர். இதனால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யாஷ் சொன்னதை போல் விஜய் ஃபேன்ஸ் நிச்சயம் கேஜிஎஃப் 2 படத்திற்கும் ஆதரவு கொடுப்பார்கள் என்பது உறுதியாகி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X