புஷ்பா 2 ஹீரோயின் ராஷ்மிகா இல்லையா...இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலியே
ஐதராபாத் : டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்த படம் புஷ்பா. கொரோனாவிற்கு பிறகு வெளியாகி, மாஸ் வெற்றியை கொடுத்த முதல் படம்.
கடந்த ஆண்டு 5 மொழிகளில் வெளியிடப்பட்ட புஷ்பா படம், உலகம் முழுவதும் 350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்திய சினிமாவில் பான் இந்தியா படத்தை பிரபலப்படுத்தியதே இந்த படம் தான்.
ஆந்திர மாநிலம் ஷேசாச்சலம் வனப்பகுதியில் காலம் காலமாக நடைபெற்று வரும் செம்மர கடத்தலை மையமாகக் கொண்ட படம். எப்படியெல்லாம் செம்மர கடத்தப்படுகிறது. சாதாரண மரம் வெட்டும் தொழிலாளியாக இருந்த புஷ்பராஜு எவ்வாறு செம்மர கடத்தல் கும்பலின் தலைவன் ஆகிறான் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இதை மறக்க முடியுமா
சமந்தா ஆடிய ஊம் சொல்றியா மாமா பாடல், இந்த படத்தை தெரியாதவர்களே இருக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியது. சமந்தாவிற்கு போட்டியாக படத்தின் நாயகியான ராஷ்மிகா ஆடிய சாமி சாமி பாடல், அல்லு அர்ஜுனின் வித்தியாசமான கெட்அப் ஆகியன இந்த படத்தை வேற லெவலில் பாப்புலர் ஆக்கியது.

இரண்டு பாகங்களாக புஷ்பா
புஷ்பா பட ரிலீசிற்கு முன்பே இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட உள்ளது என்பதை டைரக்டர் சுகுமார் அறிவித்து விட்டார். முதல் பாகத்தில் புஷ்பா எவ்வாறு செம்மர கடத்தல் டான் ஆகிறான் என அவனது வளர்ச்சியையும், இரண்டாம் பாகத்தில் அவன் எவ்வாறு சர்வதேச அளவில் பிசினஸ் செய்து பெரிய டானாக ஆட்சி செலுத்துகிறான் என்பதையும் காட்ட உள்ளதாக கூறினார்கள்.

புஷ்பா 2 ஷுட்டிங் எப்போ
ஆனால் புஷ்பா படம் ரிலீசாகி ஓராண்டு ஆக உள்ள நிலையில், புஷ்பா 2 படத்தின் ஷுட்டிங் இதுவரை துவங்கப்படாமல் தாமதமாகி வந்தது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின் படி டைரக்டர் சுகுமார் புஷ்பா 2 படத்தின் முழு கதையையும் எழுதி முடித்து விட்டாராம். ஜுலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் புஷ்பா 2 ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம்.

செம பிளானா இருக்கே
புஷ்பா 2 படத்தில் எவ்வாறு புஷ்பா செம்மரங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து, சர்வதேச அளவில் பெரிய டான் ஆகிறார் என்பதை காட்டுவதால் புஷ்பா 2 படத்தின் பல காட்சிகள் வெளிநாடுகளில் தான் எடுக்கப்பட உள்ளதாம். சீனா, ஹாங்காங், ஜப்பானெ போன்ற நாடுகளில் தான் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம்.

என்னது ராஷ்மிகா ஹீரோயின் இல்லையா
இதில் முக்கிய தகவல் என்னவென்றால் புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி ரோலில் நடித்த ராஷ்மிகா, புஷ்பா 2 படத்தின் ஹீரோயின் கிடையாதாம். அவர் கொல்லப்படுவதாக சொல்லி அவரது கேரக்டரை முடிக்க போகிறார்களாம். புஷ்பா 2 வில், புஷ்பா மீது காதல் கொள்பவராக பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் நடிக்க போகிறாராம்.

இதையெல்லாம் எதிர்பார்க்கலியே
அது மட்டுமல்ல இந்திய சினிமாவே இதுவரை பார்த்திறாத அளவிற்கு வேற லெவலில் மிரட்டலாக ஆக்ஷன் சீன்கள் வைக்கப்பட உள்ளதாம். புஷ்பா 2 படத்திலும் ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் நடிக்கும் காட்சிகள் சில இடம்பெற உள்ளதாம். புஷ்பா 2 படத்தில் ஹீரோயின், லொகேஷன் என அனைத்தும் மாற்றப்பட உள்ளதாம். எதிர்பாராத இந்த மாற்றத்தை கேட்டு ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications