என்ன சொல்றீங்க...சூர்யா 41 பாதியில் நிறுத்தப்பட்டதா...ஏன் என்ன காரணம்?

சென்னை : டைரக்டர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 41 படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. என்ன காரணம், எதற்காக நிறுத்தப்பட்டது என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிதாமகன் படத்திற்கு பிறகு கிட்டதட்ட 18 ஆண்டுகள் கழித்து சூர்யா - பாலா மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். சூர்யாவின் 41 வது படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தான் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்த ஷுட்டிங்

விறுவிறுப்பாக நடந்த ஷுட்டிங்

சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் கன்னியாகுமரியின் கடலோர மீன கிராமங்களில் மார்ச் மாதம் துவங்கி நடத்தப்பட்டது. இந்த படத்தில் சூர்யா மீனவர் ரோலில் நடிக்கிறார். இது வழக்கமான பாலா படமாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான படமாக எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஜுலை மாதத்திற்குள் சூர்யா 41 படத்தை முடித்து விட்டு, அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டதால் விறுவிறுப்பாக ஷுட்டிங் நடத்தப்பட்டது.

இப்படியா பீதிய கிளப்புவீங்க

இப்படியா பீதிய கிளப்புவீங்க

இதற்கிடையில் சூர்யா மும்பை புறப்பட்டு சென்றதால், பாலா - சூர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஷுட்டிங்கில் இருந்து சூர்யா பாதியிலேயே கோபமாக கிளம்பிச் சென்றதாகவும், படத்தில் இருந்து பாலா நீக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. இதனால் அந்த தகவல் உண்மையில்லை. கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 35 நாட்களாக நடத்தப்பட்டு வந்த சூர்யா 41 படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டதாகவும், அடுத்த கட்ட ஷுட்டிங் கோவாவில் ஜுன் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாகவும் சமீபத்தில் படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சூர்யா 41 கைவிடப்பட்டதா

சூர்யா 41 கைவிடப்பட்டதா

இந்நிலையில் சூர்யா 41 படம் பாதியில் நிறுத்தப்பட்டது கிட்டதட்ட உண்மை தான் என தகவல் பரவி வருகிறது. பாலா இயக்கிய படம் கைவிடப்பட்டதால் சூர்யா 41 படத்தை சிறுத்தை சிவாவிடம் இயக்க சொல்லி விட்டாராம் சூர்யா. சிறுத்தை சிவா - சூர்யா இணையும் படம் இரண்டு பாகங்களாக, கேஜிஎஃப் ஸ்டைலில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தான் காரணமா

இது தான் காரணமா

பாலாவுடனான ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலா இயக்கிய வர்மா படமும், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடாலேயே பாதியில் கைவிடப்பட்டது. அதே போல் நான் கடவுள் படத்தில் அஜித்துடன் பாலாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அஜித் அந்த படத்தில் இருந்து விலகி, அவருக்கு பதில் ஆர்யா மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. அந்த வரிசையில் தற்போது சூர்யா 41 படமும் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X