விக்ரம் போஸ்டரில் கமலுடன் சூர்யா...யாரு பார்த்த வேலைப்பா இது ?

சென்னை : விக்ரம் பட போஸ்டரில் கமலுடன் சூர்யா இணைந்துள்ள புதிய போஸ்டர் ஒன்று சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரை பார்த்து விட்டு சூர்யா ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசித் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் விக்ரம் படம் பற்றிய பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்து வருகிறது.

 சர்ச்சையான கமலின் பாடல்

சர்ச்சையான கமலின் பாடல்

விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ மே 15 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் கமலே எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்றாலும், அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சைகளை சந்தித்துள்ளது. கமல் எழுதிய வரிகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 சூர்யா ரோல் இதுதானா

சூர்யா ரோல் இதுதானா

இந்நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை கன்ஃபார்ம் செய்யும் விதமாக விக்ரம் ஷுட்டிங் ஸ்பாட்டில் கமல்- சூர்யா சந்தித்து கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி, செம வைரலானது. விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்த காட்சிகள் எண்ணூர் துறைமுகத்தில் படமாக்கப்பட்டதாகவும், இதில் சூர்யா கேங்ஸ்டர் ரோலில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

விரைவில் விக்ரம் படத்தில் சூர்யா நடித்துள்ளதை ஸ்பெஷல் வீடியோ மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்பட்டது. அமிதாப் பச்சன் நடிப்பதாக சொல்லப்பட்ட ரோலில் தான் சூர்யா நடித்திருப்பதாக கூறப்படுவதால் சூர்யாவின் கெட்அப் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Recommended Video

Blade என்றாலே.. பக்கிரிதானா? சர்ச்சையாகும் பத்தல பத்தல பாடல்! | KamalHaasan - Vikram
விக்ரம் போஸ்டரில் சூர்யா

விக்ரம் போஸ்டரில் சூர்யா

இந்நிலையில் கமல், முதுகில் பெரிய வாளுடன் திரும்பி நிற்பதை போன்ற விக்ரம் பட போஸ்டர் இதுவரை வெளியாகி வந்தது. இன்று இந்த போஸ்டரில் கமலுக்கு அருகில் சூர்யா முகத்தில் கோபத்துடன் நிற்பது போன்று ஒரு புதிய போஸ்டர் ஒன்று சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. ஆனால் இந்த போஸ்டரை ராஜ்கமல் ஃபிலிம்சோ, டைரக்டர் லோகேஷ் கனகராஜோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஃபேன்ஸ் பேஜ் மூலம் உருவாக்கப்பட்ட இந்த போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X