அபினய்யை விவாகரத்து செய்ய போகிறாரா மனைவி...சமந்தாவை பின்பற்றும் அபர்னா

சென்னை : பிக்பாஸ் அபினய்யின் மனைவி அபர்னா தனது கணவரை விவாகரத்து செய்ய போவதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு காரணம் அபர்னா செய்த அந்த காரியம் தான். சமந்தா ஸ்டையிலை இவரும் பின்பற்றுகிறாரே என அனைவரும் கூறி வருகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 5 ல் பாடகர், நடிகர், டிவி தொகுப்பாளர், நாட்டுப்புற கலைஞர், யூட்யூபர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் பலர் அதிகம் பிரபலமாகாத முகங்களாக இருந்ததால் ஆரம்பத்தில் டல்லடித்த இந்த நிகழ்ச்சி போக போக சூடுபிடிக்க துவங்கி உள்ளது.

ஜெமினி கணேசன் பேரன்

ஜெமினி கணேசன் பேரன்

18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அபினய் வட்டி. நடிகரும், நவீன விவசாயியுமான இவர், மறைந்த பழம்பெரும் நட்சத்திர தம்பதி ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரன் ஆவார். இவர் 2014 ல் ராமானுஜன் படத்தில் கணிதமேதை ஸ்ரீநிவாச ராமானுஜராக நடித்துள்ளார். தமிழில் அபினய் நடித்த முதல் படம் இது தான்.

பாவனி - அபினய் காதல் விவகாரம்

பாவனி - அபினய் காதல் விவகாரம்

பிக்பாஸின் தற்போதைய சீசனில் அதிகம் பேசப்பட்டது பாவனி, அபினய் காதல் விவகாரம் தான். அபினய், பாவனி மீது அதீத அக்கறை, அன்பு காட்டியது பற்றி வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்கள் கிசுகிசு பேசி வந்தனர். இது பற்றி பாவனியும் பலரிடம் பேசி உள்ளார். அபினய்யிடமே நீ என்னை லவ் பண்ணுறியா என ஓப்பனாக கேட்டு விட்டார். ஆனால் இவற்றை அபினய் மறுத்தார்.

கடுப்பான கமல்

கடுப்பான கமல்

பாட்டில் டாஸ்கின் போது, நீ பாவனியை லவ் பண்ணுறியா என ராஜு அனைவரின் எதிரிலும் கேட்டதில் இருந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. விவாத பொருளாகவும் பேசப்பட்டு, பல சண்டைகள் நடந்தது. கமலும் வந்து பேசினார். அவரிடம் தங்களுக்கு இருப்பது நட்பு தான். அது வெளியில் போனாலும் தொடரும் என்ற பாவனி, ராஜுவிடம் தனியாக எனக்கும் அபினய் மீது அப்படி ஒரு எண்ணம் உள்ளது என சொல்லியதால் கமலே கடுப்பாகி அது பற்றி பேசுவதை நிறுத்தி விட்டார்.

வெளியேற்றப்பட்ட அபினய்

வெளியேற்றப்பட்ட அபினய்

இந்த காதல் சர்ச்சையே அபினய் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் அபினய், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகும், இது ஒரு கேம். இதை தாண்டி வாழ்க்கை உள்ளது என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் அபினய்.

கேமிற்காக பயன்படுத்தவில்லை

கேமிற்காக பயன்படுத்தவில்லை

இந்நிலையில் சமீபத்தில் Ask me anything பகுதியில் பாவனி பற்றி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அபினய், ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. கேம் விளையாடுவதற்காக இதை நான் பயன்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கு தகுந்தாற் போல் இதை எடுத்துக் கொள்கிறார்கள். நான் யாருக்கும் தீர்ப்பு சொல்ல முடியாது என்றார்.

மனைவி என்ன சொன்னார்

மனைவி என்ன சொன்னார்

பாவனி விவகாரத்தை உங்கள் மனைவி எப்படி எடுத்துக் கொண்டார் என்ற கேள்விக்கு பதிலளித்த அபினய், எல்லா மனைவிகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ அப்படி தான். ஆனால் இவை எல்லாமே நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ அப்படி தான் நடக்கும். கடைசியில் குடும்பம் தான் எல்லாமும் என்றார்.

ஆதரவாக பேசிய மனைவி

ஆதரவாக பேசிய மனைவி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி விவகாரம் பெரிதாக வெடித்த போது, நீ எப்படிபட்டவன் என எனக்கு தெரியும். என்னை விட உன்னை யாருக்கும் தெரியாது. என்னை போல் புரிந்து கொள்ளவும் முடியாது. Love you always. always team abhinay - aparna abhinay என இன்ஸ்டாகிராமில் அபினய்யின் மனைவி அபர்னாவும் பதிவிட்டிருந்தார்.

அபர்னா செய்த காரியம்

அபர்னா செய்த காரியம்

ஆனால் இதுவரை இன்ஸ்டாகிராமில் தனது பெயரை அபர்னா அபினய் என குறிப்பிட்டிருந்த அபர்னா, தற்போது அபர்னா வரதராஜன் என மாற்றிக் கொண்டுள்ளார். நடிகை சமந்தாவும் இப்படி தான் தனது கணவரை பிரிய போவதாக முதலில் சொன்னார். அதே வழியை பின்பற்றுகிறாரா அபர்னா, அபினய்யை விவாகரத்து செய்ய போகிறாரா, முதலில் அபினய்க்கு ஆதரவாக பேசிய அபர்னா இப்போது ஏன் தனது பெயரில் இருந்த கணவர் பெயரை நீக்கினார் என அடுக்கடுக்காக பல கேள்விகளும் வதந்திகளும் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X