செம மிரட்டலா இருக்கே...கமலின் அடுத்த படத்தில் விக்ரம், விஜய் சேதுபதியா ?

சென்னை : பல முன்னணி ஸ்டார்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது சினிமா பிரியர்களை மேலும் குஷிப்படுத்துவதாக அமைவதுடன், பிரம்மாண்ட வெற்றியையும் பெற்று வருகின்றன.

சமீபத்தில் அப்படி பிளாக் பஸ்டர் ஆன படங்களில் விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா, ரஜினி - விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிக்குமார் இணைந்து நடித்த பேட்ட, விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் ஆகியன அடங்கும்.

இதைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவால் லேட்டஸ்ட்டாக உருவாகி வரும் மல்டி ஸ்டார் படம் என்றால் அது கமல் நடித்து வரும் விக்ரம் படம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் கமலுக்கு 5 வில்லன்களாம். அவர்களில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் ஏற்கனவே ஷுட்டிங்கில் பங்கேற்று வருகின்றனர். இவரைத் தொடர்ந்து நரேனும் இணைந்துள்ளார்.

தேவன் மகன் 2 தயாராகிறது

தேவன் மகன் 2 தயாராகிறது

விக்ரம் படத்துடன் சேர்த்து மற்றொரு மெகா ப்ரோஜக்ட் படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை துவக்கி விட்டார் கமல். கமலின் மெகாஹிட் படமான தேவர் மகனின் அடுத்த பாகமாக இந்த படம் எடுக்கப்பட உள்ளதாம். சிவாஜி கணேசன், கமல் இணைந்து நடித்த கிராமத்து படமாக 1992 ல் வெளியானது தேவகர் மகன் படம்.

தலைவன் இருக்கிறான்

தலைவன் இருக்கிறான்

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மலையாளத்தில் மிக பிரம்மாண்ட ஹிட் படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க போகிறார். இந்த படத்திற்காக கமலே கதை, திரைக்கதை எழுதி வருகிறார். இதற்கான வேலைகளை கமல் ஏற்கனவே துவங்கி விட்டாராம். இந்த படத்திற்கு தலைவன் இருக்கிறான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம்.

சிவாஜி ரோலில் கமலா

சிவாஜி ரோலில் கமலா

தேவர் மகன் 2 வில் கமல், சிவாஜி நடித்த கிராமத்து தலைவர் ரோலிலும், அவரது மகனாக விக்ரமும் நடிக்க போகிறார்களாம். அதே போல் முதல் பாகத்தில் நாசர் நடித்த வில்லன் மாயனின் மகனாக விஜய் சேதுபதி நடிக்கிறாராம். இருப்பினும் இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இது உண்மையா

இது உண்மையா

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ரசிகர்களுக்கு இந்த படம் மெகா ட்ரீட்டாகவே அமையும். கமல், விக்ரம், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படம் மிகப் பெரிய ஹிட் படமாக அமையும் என கோலிவுட்டில் இப்போதே பேச துவங்கி விட்டனர்.

பிஸியான ஹீரோக்கள்

பிஸியான ஹீரோக்கள்

தற்போது கமல், விஜய் சேதுபதி, விக்ரம் மூவருமே பல படங்களில் பிஸியாக உள்ளனர். அதிலும் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் 12 படங்களை கைவசம் வைத்துள்ளார். ஏற்கனவே இவர் நடித்த பல படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. விக்ரமின் மகான், கோப்ரா போன்ற படங்களும் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X