என்னங்க சொல்றீங்க...இனி கமல் பிக்பாசை தொகுத்து வழங்க மாட்டாரா...அவருக்கு பதில் யார் ?

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டாராம். இந்த வாரம் அவர் தொகுத்து வழங்க போவது தான் கடைசி எபிசோட் என தகவல் பரவி வருகிறது. இதனால் அவருக்கு பதிலாக இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 2017 ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நிறைவடைந்தது. பிக்பாசின் ஐந்து சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஓடிடியில் 24 மணி நேர நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் வார இறுதி நாட்களில் மட்டும் கமல் வரும் எபிசோட்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பிக்பாசிலிருந்து விலகுகிறாரா கமல்

பிக்பாசிலிருந்து விலகுகிறாரா கமல்

பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்கள், குறிப்பாக வனிதா விஜயக்குமார் செய்யும் தவறுகளை கமல் கேள்வி கேட்பதில்லை என்றும், போட்டியாளர்கள் இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதையும் கமல் கட்டுப்படுத்தவில்லை என கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக போவதாக மீண்டும் தகவல் பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 5 துவங்குவதற்கு முன்பும், கமல் அரசியலில் பிசியாக இருப்பதாக அவர் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வர மாட்டார் என கூறப்பட்டது.

இது தான் கடைசி எபிசோடா

இது தான் கடைசி எபிசோடா

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது தான் கமல் பங்கேற்கும் கடைசி பிக்பாஸ் எபிசோட் என கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் கமல் பயங்கர பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கமலுக்கு பதில் இனி யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவர் தான் புதிய தொகுப்பாளரா

இவர் தான் புதிய தொகுப்பாளரா

வனிதாவின் ஆட்டம் தான் ஆரம்பம் முதலே ஓவராக இருந்து வருவதால் அவரை சமாளிக்கக் கூடிய ஒரே ஆள் ரம்யா கிருஷ்ணன் தான் என்பதால் பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்க வருவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக வந்து வனிதாவை தெறித்து ஓட வைத்தார். அதைத் தொடர்ந்து கமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனால் அவர் தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அட...இது வேறய்யா

அட...இது வேறய்யா

அதே சமயம் மற்றொரு தகவலாக சரத்குமார் அல்லது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாசை அடுத்து தொகுத்து வழங்க போகிறவர் யார் என நெட்டிசன்கள் பலரின் பெயரை யூகித்து வந்தாலும், கமல் இனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர மாட்டார் என கூறப்படுவதே வதந்தி தான் என சொல்லப்படுகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை துவக்கும் போது பிக்பாஸ் எந்த வெர்சனாக இருந்தாலும் தான் வருவேன் என்றும், மக்களிடம் தனது கருத்துக்களை முன்வைக்க கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தான் தவற விட போவதில்லை என்றும் தெளிவாக கூறி இருந்தார். அதனால் பரபரப்பிற்காக இது போல் வதந்திகள் பரப்பப்படுவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X