டபுள் சம்பவம் காத்திருக்கா... லீக்கான லோகேஷ் கனகராஜின் விக்ரம் சர்ப்ரைஸ் பிளான்

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் விக்ரம். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, ஷிவானி நாராயணன், நரேன் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் காரைக்குடியில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் புதுச்சேரியில் துவங்கப்பட்டுள்ளது.

கமல் மகனான காளிதாஸ்

கமல் மகனான காளிதாஸ்

முதல்கட்ட ஷுட்டிங்கில் கமல், விஜய் சேதுபதி, மைனா நந்தினி, ஷிவானி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாம். இந்த படத்தில் மெயின் வில்லனான விஜய் சேதுபதியின் மனைவியாக மைனா நந்தினியும், மகேஸ்வரியும், காதலியாக ஷிவானியும் நடிப்பதாக கூறப்பட்டது. கமலின் மகனான காளிதாஸ் ஜெயராம் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

இரண்டு பாகங்களாக வருதா

இரண்டு பாகங்களாக வருதா

இந்நிலையில் லேட்டஸ்ட்டாக கசிந்துள்ள தகவலின்படி, விக்ரம் படத்தை இரண்டு பாகங்களாக இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். விக்ரம் படத்தின் கதையை தயார் செய்தது முதலே லோகேஷிற்கு இந்த பிளான் உள்ளதாம். பெரிய அளவில் விரிவாக இந்த கதையை எடுக்க வேண்டும் என நினைத்துள்ளாராம்.

லோகேஷ் கனகராஜ் பிளான்

லோகேஷ் கனகராஜ் பிளான்

கதையை சுருக்க விரும்பாத லோகேஷ், அப்படியே படமாக நினைத்துள்ளார். ஆனால் படத்தின் நேரம் கருதி இரண்டு பாகங்களாக எடுத்து விடலாம் என முடிவு செய்துள்ளாராம். விக்ரம் பார்ட் 2 ம் வர உள்ள தகவல் கமல் ரசிகர்களுக்கு நிச்சயம் டபுள் தமாக்காவவாக இருக்கும் என்றும், பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. மொத்தத்தில் தரமான டபுள் சம்பவம் காத்திருக்கு என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

இளமை தோற்றத்தில் கமல்

இளமை தோற்றத்தில் கமல்

ஆக்ஷன் படமாக உருவாகி வரும் விக்ரம் படம், ரவுடி கும்பலை எதிர்க்கும் ஹீரோ கதை தான் என்றாலும், அதை வித்தியாசமாக சொல்ல உள்ளார்களாம். ஏற்கனவே இந்த படத்தில் புதிய டெக்னாலஜிகள் பலவற்றை பயன்படுத்தி 80 களில் உள்ள தோற்றத்திலும் கமலை காட்ட உள்ளனராம். இளமை தோற்றம், அதிரடி ஆக்ஷன் காட்டி கமலின் மீதான மாஸை மேலும் கூட்ட திட்டமிட்டுள்ளனர்.

உற்சாகமடைந்த ரசிகர்கள்

உற்சாகமடைந்த ரசிகர்கள்

ஆரம்பம் முதலே விக்ரம் பட பற்றி அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் படத்தின் மீதான ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் இரண்டு பாகங்களாக படத்தை இயக்க போகிறார்கள் என்ற தகவல் கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

எப்படி நடிக்க போகிறார் கமல்

எப்படி நடிக்க போகிறார் கமல்

முதல் பாகத்தை ரிலீஸ் செய்த பிறகு இரண்டாம் பாகத்தை எடுக்க போகிறார்களா. அல்லது இரண்டு பாகங்களையும் ஒரே சமயத்தில் எடுத்து, அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய போகிறார்களா என தெரியவில்லை. கமல் ஏற்கனவே பல படங்களில் வரிசையாக கமிட் ஆகி இருப்பதால் இந்த படத்தில் எப்போது நடிக்க போகிறார் என தெரியவில்லை.

Recommended Video

Vikram படத்தில் Vijaysethupathi -கு மூன்று ஜோடி | Shivani, Myna Nandhini, Maheswari
கமலுக்காக காத்திருக்கும் படங்கள்

கமலுக்காக காத்திருக்கும் படங்கள்

இந்தியன் 2, பாபநாசம் 2, தேவர் மகன் 2 என வரிசையாக பார்ட் 2 படங்கள் கமலுக்காக காத்திருக்கின்றன. இதற்கிடையில் வரும் அக்டோபர் 3 ம் தேதி துவங்க உள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடரும் என்பதால் இதற்கிடையில் எப்படி விக்ரம் 2 வையும் கமல் நடிப்பார் என தெரியவில்லை.

latest hot buzz says that lokesh kanagaraj planned to make vikram sequel. from the beginning he didn't want to short the story. but this story needs more space. so he decided to make sequel of the movie.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X